The Official Education Site of DHARUL HIKMA

Phone : (+94) 752523669
Email : kalvithottam@gmail.com

விஞ்ஞானம்

செயற்கை மேகங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள்!

விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது.
கத்தார் பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் சாவூத் அப்துல் கனி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாவூத் அப்துல் கனி, திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெப்பத்தை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம்.
இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம்.
2022ம் ஆண்டில், தோஹாவில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, வாகனம் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில்,
செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதனை கையடக்க தொலைபேசிகள் மூலம் இயக்கலாம். இதன் ஆரம்ப விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ கூடும் என சாவூத் அப்துல் கனி கூறியுள்ளார்.



கரப்பொத்தான் பூச்சியார் கவனம்


ஒரு தொடர் மாடி வீட்டிற்குச் சென்ற போது பல ஆண்கள் தும்புத்தடி, பிரஸ், பூச்சி மருந்து ஸ்பிரேகள் சகிதம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசயம்?” என விசாரித்தேன்.

“சிரமதானம் செய்கிறோம். கரப்பத்தான் பூச்சிகளை ஒழிப்பதற்கு” என்றனர்.


சமூக அக்கறையுள்ள செயற்பாடு. கேட்பதற்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

எங்கும் உள்ளவர் எல்லாம் வல்லவர்.

எங்குமுள்ள எல்லாம் வல்ல ஆண்டவனோ என்று சொல்லுமளவிற்கு உலகெங்கும் பரந்துள்ளனர். அத்துடன் பலவிதமான நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிக்க எடுக்கும் எந்த முயற்சியும் பாராட்டத்தக்கதே. உலகை ஆட்சி புரிந்து வருவது இவர்களது இனம்தான்.


சாதாரணமாக நாங்கள் கரப்பொத்தான் பூச்சி என்று சொன்னாலும் இவர்களுக்குள் 5000ற்கு மேற்பட்ட உப இனங்கள் உள்ளனவாம்.

இவைகளுள் மிகப் பெரியவரைக் கண்டால் குழந்தைகள் மட்டுமல்ல நீங்களும் பயந்துவிடுவீர்கள். 6 அங்குல நீளமும் சிறகு விரித்தால் ஒரு அடி வரையான அகலமும் உள்ள வகையானவர் தென் அமெரிக்காவில் வசிக்கிறார்களாம்.

கரப்பொத்தான் பூச்சியைக் கண்டாலே பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும்.


அவற்றின் அசிங்கமான தோற்றமும், அதன் எச்சங்கள் விட்டுச் செல்லும் துர்நாற்றமும் எல்லோரையும் அருவருப்படையச் செய்துவிடும்.

கழிவறையில் களிநடனம் புரியும் அவர் கால் கை கழுவாமலே சமையலறையிலும், சாப்பாட்டு மேசையிலும் வாய்ப்புக் கிடைத்தால் உணவுகளின் மீதும் ஊர்ந்து செல்வதைக் கண்டால் யாருக்குத்தான் வாந்தி வராது.

திடீரென சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தால் எப்படித் தப்புவது எனப் புரியாது பதுங்கவே மனம் நாடும்.

பரப்பும் நோய்கள்

இவர்களிலிருந்து வரும் மருத்துவப் பிரச்சனைகளில் முக்கியமாக அலர்ஜியையும் ஆஸ்த்மாவையும் சொல்லலாம். இவற்றின் மலம், எச்சில், முட்டை, தோல் போன்ற யாவுமே ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.


உங்களுக்கு அல்லது வேறு எவரை எடுத்துக் கொண்டாலும், முன் எப்போதும் ஒவ்வாமை இல்லாதவர்கள் கூட கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஒவ்வாமை தோன்றிவிட வாய்ப்பு அதிகமிருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

அதே நேரம் ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தை கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் கடுமையான ஆஸ்த்மா வருவதற்கும், அதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைகளும் அதிகமாக எற்படுமாம்.

இவற்றின் எச்சங்கள் தோலில் அழற்ச்சி, அரிப்பு, எக்ஸிமா போன்ற நோய்களையும் ஏற்படத்துகின்றன.

அழுக்குகளில் உழலும் இவரது உடலிலும், உணவுக் கால்வாயிலும், மலத்திலும் கலந்திருக்கும் சல்மனலா Salmonella கிருமிகளால் உணவு நஞ்சடைதல் ஏற்படலாம். அதேபோல அவற்றிலிருந்து Staphylococcus, Streptococcus போன்ற கிருமிகளும் தொற்றுகிறது.
 

வதிவிடம்

வடதுருவக் குளிரிலும் வாழக் கூடிய வலு உள்ள இவர் எங்கும் இருக்கலாம். இவர்களது வாழ்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டியவையாவன.
  • ஈரலிப்பு
  • சற்று வெப்பமான சூழல்
  • உணவு
  • ஒளிந்து உறைய சிறு வெடிப்புகள் துவாரங்கள் போன்ற இடங்கள்

உணவு

அவர் சொகுசு உணவுகளைத் தேடி அலைபவர் அல்ல. உங்கள் சமையறையில் சிந்திக் கிடக்கும் உணவுத் துகள்கள் போதுமானது. புத்தகம் கட்டும்போது இடப்பட்ட பசை, சுவரில் ஒட்டப்பட்ட படங்களுக்கு பின் இருக்கும் பசை கூட அவருக்கு உணவாகலாம். இதனால்தான் நீங்கள் எவ்வளவு சுத்தமாக உங்கள் இருப்பிடத்தை வைத்திருந்தாலும் அவருக்கான உணவு கிடைத்துவிடுகிறது.

இனப்பெருக்கம் பரம்பல்

அத்துடன் இனப் பெருக்கத்தில் மிக வேகம் கொண்டவர். நீங்கள் உங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் மளிகைக் கடையில் வாங்கி வந்த பொருட்களுடன் வந்துவிடுவார்.


அல்லது பக்கத்து வீட்டிலிருந்து கதவின் கீழாகவோ அல்லது கழிவுப் பைப்புகள் ஊடாகவோ ஒரு கரந்துறைப் படைவீரன் போலச் சிமிக்கிடாமல் உள் நுழைந்துவிடுவார். ஒரே ஒரு கர்ப்பணிக் கரப்பொத்தான் பூச்சி நுழைந்துவிடுகிறார் என வைத்துக் கொள்வோம். கவனியாது விட்டால் அவரது பரம்பரையினராக 100,000 பேர் உங்கள் வீட்டில் வாசம் செய்யக் கூடும்.

பெருகுவதைத் தடுப்பதும் நீங்கள் தப்புவதும்.

சுத்தம் மிக முக்கியம். அவருக்கு உண்ண எதுவும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தங்கள்.

  • அரிசி, உழுந்து போன்ற தானியங்களையும் விதைகளையும் காற்றுப் புகாத போத்தல்கள் ஜாடிகள் பொன்றவற்றில் சேமித்து வையுங்கள்.
  • உணவு உண்ட கோப்பைகள், பானம் அருந்திய கிளாஸ் போன்ற எதனையும் இரவில் சுத்தம் செய்யாது வெளியே வைக்க வேண்டாம். 
  • உணவு உண்ட மேசை, வோஷ் பேசின், போன்ற யாவற்றையும் சுத்தம் செய்த பின்னரே படுக்கைக்குச் செல்லுங்கள். 
  • குப்பை வாளிகளை மூடி வையுங்கள். 
  • வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவு வைத்தால் இரவில் அது காலியாக சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.


  • சிந்தும் ஒழுகும் குழாய்களை உடனடியாகத் திருத்துங்கள். 
  • சுவரில் உள்ள வெடிப்புகள், குழாய் செல்லும் பாதைகள், வயரிங் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சிறு இடுக்குகள் வழியாக நுழைந்து விடுவார்கள். எனவே அவற்றை அடைத்து அவரது பாதைகளை மூடுங்கள்.

மிகச் சிறிய குஞ்சு 5 மிமி இடைவெளிக்கு ஊடாக புகுந்து வந்துவிடுவார். ஆண்களுக்கு 1.6 மிமி, வயிறு பருத்த கரப்பணிகளுக்கு 4.5 மிமி போதுமாம். சென்ரி மீற்றர் அல்ல மில்லி மீற்றர்.

குளியலறை, சமையலறை ஆகியன அவர்களுக்கான உணவும் ஈரலிப்பும் கிடைக்கக் கூடிய இடங்கள் ஆதலால் அதிக கவனம் எடுக்க வேண்டிய இடங்களாகும். அத்துடன் குழாய்கள் வரும் பாதைகள் அவர்கள் உள் நுழைய மிக வசதியான வழிகளாகும்.

தேவையற்ற பொருட்களை அகற்றி விடுங்கள். பழைய துணிகள் கால்மிதிகள், ஸ்பொன்ஞ் போன்ற எதையும் அகற்றாது விட வேண்டாம்.

சிலிக்கா ஜெல், போரிக் அசிட் பவுடர் ஆகியன அவரை விரட்டக் கூடிய ஆபத்தற்ற பொருட்களாகும். கிருமி கொல்லி மருந்துகள் நஞ்சாதலால் மிகுந்த அவதானத்துடன் உபயோகிக்க வேண்டியவையாகும்.

தொடர் மாடிவீடுகள் அவர்களுக்கு மிக வசதியானவை. இடமாற்றம் பெற்று புது வீட்டிற்கு மாறிவிடுவார்கள்.

எனவே ஒரு வீட்டிலிருந்தோ அல்லது கீழே உள்ள கழிவு நீர்ப் பாதைகள் பொது வழிகள் ஆகியவற்றை ஒழித்துவிடுவது மட்டும் போதுமானதல்ல.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும். அதுவும் ஒரே நேரத்தில்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.


மனிதனை போன்ற கை கொண்ட அரிய மீன்கள்

e
இது ஆஸ்திரேலியா கடற்பரப்பில்வாழும் மீன்கள்






0 comments:

கருத்துரையிடுக


மன்னிக்கவும்.. இவ் வலைப்பக்கமானது திருத்த வேலை காரணமாக சோதனையோட்டத்தில் உள்ளது.

Recent Posts

ரூ. 251க்கு ஸ்மார்ட்போனா! இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, 251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Visiters