உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)
2011 உலகக் கிண்ண போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் முக்கியமான அணிகளது அணித்தேர்வையும், குறிப்பிட்ட அணிகளின் உலகக் கிண்ண நிலைப்பாட்டையும் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் எனது பேவரிட் அணியாக (வெறித்தனமான) இருந்த இலங்கை இந்த ஆண்டு எனக்கு பிடிக்காத அணிகள் வரிசையில் முதலிடத்தில்!!!(மாற்றம் என்றொன்றை தவிர மிகுதி எல்லாமே மாறும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்த இடம்). இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ (இலங்கை உட்பட) உலகக்கிண்ண போட்டிகளை பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கட்டை மட்டுமே ரசிப்பதாக முடிவெடுத்துள்ளேன்.
ஆனால் இந்த நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பது அவளவு சுலபமில்லை; இணையத் தளங்கள், face book நண்பர்கள், வலைப்பதிவுகள், கூட மேட்ச் பார்ப்பவர்கள், கிரிக்கட் பற்றி பேசும் நண்பர்கள் + பழக்கமானவர்கள் போன்றோர் சும்மா இருக்கிறவனை உசுப்பி ஏதாவதொரு அணிக்கு எதிராகவாவது மாறக்கூடும், அவங்க கிட்ட சிக்காமபோனா இந்த உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கட்டை மட்டும் ரசிக்கமுடியும் என்று நம்புகின்றேன், பார்ப்போம்!!!!!!
அவுஸ்திரேலியா
ஆங்கில முதலெழுத்துக்கள் என்றாலும் சரி, கடந்தகால உலக கிண்ண பெறுபேறுகள் என்றாலும் சரி முதலாவதாக வரும் பெயர் அவுஸ்திரேலியாதான் என்பதால் முதலில் அவுஸ்திரேலியா பற்றி பார்ப்போம்.
இதுவரை இடம்பெற்ற ஒன்பது உலககிண்ண போட்டித் தொடர்களில் 6 தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அவுஸ்திரேலியா அதில் நான்கு தடவை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று உலகக் கிண்ண தொடரிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2011 உலக கிண்ணப் போட்டிகளுக்கு 'நடப்பு சாம்பியன்' என்கின்ற பெயரோடு களமிறங்கினாலும் கடந்த இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் கால்பதிக்கும் போதிருந்த மனோதிடத்துடன் இந்த உலகக் கிண்ண போட்டிகளிலும் கால்பதிக்குமா? என்றால், இல்லை என்பதுதான் பதிலாகவிருக்கும். கடந்த சில மாதங்களாக ஏற்ப்பட்ட தோல்விகளுக்கு மருந்து தடவியதுபோல் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடர் அவுஸ்திரேலியாவிற்கு சார்பாக அமைந்தாலும் ஆசிய ஆடுகளங்களில் ஆடுவதற்கும் சொந்த மண்ணில் ஆடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது என்பதை அவுஸ்திரேலியர்கள் அறியாதவர்கள் அல்ல.
ஆனாலும் கடந்த காலங்களை புரட்டிப் பார்த்தால் ஆசிய ஆடுகளங்களில் அவுஸ்திரேலியாவின் பலம் என்னவென்பது நன்கு புலப்படும்; இதற்கு முன்னர் ஆசிய நாடுகளில் இடம்பெற்ற இரு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் இறுதியாட்டத்திற்கு தகுதியான அவுஸ்திரேலியா அவற்றில் ஒரு தடவை சாம்பியனாகவும் (1987), ஒரு தடவை Runner-up ஆகவும் (1996) சாதித்துள்ளது. அதேபோல இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரையும் கைப்பற்றியது அவுஸ்திரேலியாதான். அதேபோல இந்தியாவில் இறுதியாக ஒரு 'ஒருநாள் போட்டியில்' மட்டுமே விளையாடி தொடரை இழந்ததை தவிர இறுதி 15 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற அனைத்து தொடர்களையும் (முக்கோணத் தொடர்கள் உட்பட) அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய அணிகளைவிட இந்திய ஆடுகளங்களில் அதிகம் சாதித்தது அவுஸ்திரேலியாதான் என்றாலும் பொண்டிங், கிளார்க் இருவரது போமும் (form); பொண்டிங், ஹசி, டைட் மூவரதும் உபாதையும் அவுஸ்திரேலியாவிற்கு பாதகமான விடயங்கள். அவுஸ்திரேலியா அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து பதினோரு சிறந்த வீரர்களை கொண்ட அணியை தெரிவுசெய்ய முடியுமாயினும் 'கமரூன் வைட்'டிற்கு பதிலாக சிறப்பான போமிலிருக்கும் (form) ஷோன் மார்ஸ்சை அணியில் சேர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்திய ஆடுகளங்கள் மற்றும் சுழல்பந்து வீச்சு; இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவரான மார்ஸ் ஒருவேளை பொண்டிங் அல்லது ஹசி உபாதை காரணமாக விளையாட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவரது இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்வார்.
பந்துவீச்சை பொறுத்தவரை பிரட் லீயின் போம் (form) மீளக் கிடைக்கப் பெற்றமையும்; பொலிங்கர், டைட், ஹுருக்ஸ், வொட்சன் போன்றவர்களது சிறப்பான பந்து வீச்சு போமும் (form); பகுதிநேர சூழலுக்காக 'ஸ்டீவன் ஸ்மித்' மற்றும் 'டேவிட் ஹசி' அணியில் இருப்பதுவும் அவுஸ்திரேலியாவிற்கு சாதகமான விடயமே, பந்துவீச்சு வரிசை சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்கிறது, ஒருவேளை 'கிளன் மக்ரா' இல்லாததன் தாக்கமோ என்னமோ!!!
துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இந்திய ஆடுகங்களில் சிறப்பாக ஆடக்கூடியவரும் சிறந்த போமில் (form) உள்ளவருமான ஷேன் வொட்சன் மிகப்பெரும் பலம். வொட்சன் தவிர்த்து பார்த்தால் வேறெந்த வீரர்களும் சிறப்பான போமில் (form) இல்லாதமை அவுஸ்திரேலியாவிற்கு மிகவும் பாதகமான விடயம். பொண்டிங், கிளார்க் இருவரும் போமிற்கு (form) திரும்பாத பட்சத்தில் அவுஸ்திரேலியாவிற்கு மிகப்பெரும் பாதகமான காரணியாக அவர்களது துடுப்பாட்ட வரிசை அமையலாம்!! அதேபோல 7 ஆம் இலக்கத்தில் களமிறங்கும் 'ஸ்டீவன் ஸ்மித்' அந்த இடத்திற்கு சரியான தெரிவல்ல.
2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றக் கூடியளவிற்கு தகுதியான அணியாக அவுஸ்திரேலியா இருந்தாலும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் பேவரிட் அணியாக கூற முடியாது. ஒருவேளை இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு போடப்பட்ட தரமான பிட்ச் (pitch) போன்று இம்முறையும் தரமான பிட்ச் (pitch) போடப்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா ஏனைய அணிகளைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
ஷேன் வொட்சன்
பிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)
ரிக்கி பொண்டிங் (தலைவர்)
மைக்கல் கிளார்க்
டேவிட் ஹசி
மைக்கல் ஹசி
ஸ்டீவன் ஸ்மித்
பிரட் லீ
நதன் ஹுருக்ஸ்
டக் பொலிங்கர்
ஷோன் டைட்
மிகுதி நால்வரும்
மிச்சல் ஜோன்சன்
டிம் பெயின் (விக்கட் காப்பாளர்)
கமரூன் வைட்
ஜோன் ஹஸ்டிங்
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)
பாகிஸ்தான்
ஒருநாள் போட்டிகளில் இரு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவான பாகிஸ்தான் அணி; அவற்றில் 1992 இல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் champion ஆகவும், 1999 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் runner-up ஆகவும் தனது உலகக் கிண்ண முத்திரையை பதித்துள்ளது. அதேபோல T/20 போட்டிகளில் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டிகளில் champion ஆகவும் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போட்டிகளில் runner-up ஆகவும் தன் முத்திரையை பதித்துள்ளது. இந்த தரவுகளில் இருந்து ஒரு விடயத்தை தெரிந்துகொள்ளலாம்; பாகிஸ்தான் இதுவரை இறுதிப் போட்டிக்கு சென்ற நான்கு தடவையும் ஆசிய நாடுகளுக்கு வெளியேதான் தன் முத்திரையை பதித்துள்ளது என்பதுதான் அது.
உலகக் கிண்ண போட்டிகளில் ஆசியாவிற்கு வெளியே சாதித்திருந்தாலும்; இலங்கை, இந்திய அணிகளுடன் இலங்கை, இந்திய ஆடுகளங்களில் இடம்பெற்ற ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பான வெற்றிகளை இதற்க்கு முன்னர் பெற்றிருப்பது அவர்களால் இலங்கை இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட முடியும் என்பதற்கு சான்று. ஆனாலும் பாகிஸ்தான் 2009 இல் இருந்து இன்றுவரை தான் விளையாடிய 9 ஒருநாள் போட்டித் தொடர்களில் ஒன்றிலேனும் வெற்றி கொள்ளவில்லை என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை மனோரீதியாக சாதகமான விடயமல்ல. தற்போது நியூசிலாந்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் போட்டித்தொடரில் அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று தொடரை வெற்றிகொள்ளும் பட்சத்தில் அது பாகிஸ்தான் வீரர்களுக்கு மிகப்பெரும் மனோரீதியான சக்தியை கொடுக்கும்.
2001 உலக கிண்ணப் போட்டிகளை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு ஆரம்ப போட்டிகள் இலங்கை மைதானங்களில் இடம்பெறுவது சாதகமான விடயமே, இந்திய மைதானங்களில் கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவைவிட இலங்கை மைதானங்களில் பாகிஸ்தானுக்கு அதிகளவு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இதைவிட பாகிஸ்தானுக்கு 2011 உலக கிண்ண போட்டிகளில் சாதகமான விடயம் எதுவென தேடினால் பெரிதாக எவையும் புலப்படவில்லை. 2007 உலககிண்ண போட்டிகள் வரை பாகிஸ்தானின் மிகப்பெரும் பலமாக இருந்து வந்த மத்தியவரிசையும் (middle order), 2003 உலக கிண்ண போட்டிகள் வரை அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த வேகப்பந்து வீச்சும் தற்போது இல்லாமையும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவே.
யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹாக் என இரண்டு சிறந்த வீரர்கள் மத்திய வரிசையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும் யூனிஸ்கானின் மோசமான போம் (form) கவலையான விடயமே. முகம்மது யூசப், சொகைப் மாலிக்கை ஆகிய இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் நடுவரிசைக்கு தெரிவு செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக இருந்திருக்கும், இருவருமே ஆசிய ஆடுகளங்களில் சிறப்பான பெறுதிகளை கொண்ட வீரர்கள். அவர்களது போம் (form) பிரச்சினை என்றால் தற்போது இடம்பெறும் நியூ சிலாந்து அணியுடனான போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். உமர் அக்மல் சிறந்த வீரர்தான் என்றாலும் அவரது தற்போதைய போம் (form) மற்றும் அனுபவமின்மை போன்றன பாகிஸ்தானின் மத்தியவரிசைக்கு பலம் சேர்க்குமா என்கின்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றன!!
சாயிட் அன்வருக்கு பின்னர் இதுவரை நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிடைக்காமல் திணறும் பாகிஸ்தானுக்கு 2011 உலகக் கிண்ண போட்டிகளிலும் நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லை என்பது கவலைக்குரிய விடயமே. கமரன் அக்மல் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்கின்ற நம்பிக்கை இருந்தாலும் தற்போது அவர் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருக்குபதி ஆரம்ப வீரராக களமிறங்கும் 'இளம் வீரர்' அஹ்மத் ஷேக்சாட் அனுபம் குறைந்தவராக இருப்பினும் இளங்கன்று என்பதால் அழுத்தங்கள் இல்லாமல் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் சந்தர்ப்பமும் உண்டு. அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹபீஸ் சிறந்த போமில் (form) இருப்பதால் இந்த உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்று நம்பலாம்.
அதேநேரம் பாகிஸ்தானின் மத்திய வரிசையின் மிகப்பெரும் பலவீனமாக இருக்கும் சாயிட் அப்ரிடியை ஷேக்சாட்டிற்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ; அல்லது ஷேக்சாட்டும் அப்ரிடியும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க முஹமட் ஹபீஸ் 3 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராகவோ; களமிறக்கினால் அப்ரிடி வேகமான அதிரடியை ஆரம்பத்தில் கொடுக்கும் அதேநேரம், மத்தியவரிசையில் ஆடும்போது கைக்கு வந்த போட்டியை தனது பொறுப்பற்ற ஆட்டத்தால் கெடுக்கும் சந்தப்பமும் குறைவடையும். அப்ரிடி 7 ஆம் இலக்கத்தில் கொடுக்கும் பினிஷிங்கை அப்துல் ரசாக்கால் வழங்கமுடியும் என்பதால் அப்பிடி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் அது பாகிஸ்தானுக்கு 'ஆசிய ஆடுகளங்களில்' சாதகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
பந்து வீச்சை பொறுத்தவரை சஜித் அஜ்மலதும், அப்ரிடியினதும், ஹபீசினது சுழல் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக அமையும், அதே நேரம் வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி சொல்வதற்கு விசேடமாக ஒன்றுமில்லை. அக்தர் அணியில் இருந்தாலும் அவரது அண்மைய போம் (form) சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக இல்லை, அதேநேரம் ஆடுகளங்களும் காலநிலையும் ஒத்துழைக்கும் பட்சத்தில் அப்துல் ரசாக்கின் 'ரிவர்ஸ் ஸ்விங்' எதிரணி மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. உமர் க(g)ள், சொஹைல் டன்வீர் போன்றோரும் அன்றைய நாள் சிறப்பாக அண்மையும் பட்சத்தில் எதிரணியினருக்கு மிகுந்த சவாலாக அமைவார்கள் என்று நம்பலாம்
இதே பாகிஸ்தான் அணியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முஹமட் அமீர், சல்மான் பட், முஹமட் அசீவ் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணியின் இன்றைய நிலையே வேறு. ஒருவேளை இவர்களும் அணியில் இருந்து மாலிக், யூசப் போறோரும் பாகிஸ்தான் அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் 2011 உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளின் வரிசையில் பாகிஸ்தானை நிச்சயமாக முன்னிறுத்தி கூறியிருக்கலாம். அதேநேரம் பலமில்லாத புதுமுக அணிவீரர்களுடன் களமிறங்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் T/20 உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் கைப்பற்றியதையும் மறக்க கூடாது. அணிக்குள் பிரச்சினை, சூதாட்ட தொடர்பு என்பன இல்லாதவிடத்து எப்போதுமே பாகிஸ்தானின் பலமாக இருக்கும் 'போராட்ட குணத்தினையும்', 'இருக்கும் திறமைகளையும்' வைத்து பாகிஸ்தான் உச்ச வெற்றியை அடைந்தாலும் ஆச்சரியமில்லை.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
சாஹிட் அப்ரிடி (தலைவர்)
முஹமட் ஹபீஸ்
யூனுஸ் கான்
உமர் அக்மல்
மிஸ்பா உல் ஹாக்
கமரன் அக்மல் (விக்கட் காப்பாளர்)
அப்துல் ரசாக்
உமர் க(g)ள்
சொஹைல் டன்வீர்
சொஹைப் அக்தர்
சஜித் அஹ்மட்
மிகுதி நால்வரும்
அஹ்மத் ஷேக்சாட்
அப்துல் ரகுமான்
அஷாட் ஷபீக்
வஹாப் ரியாஸ்
உலககிண்ணத்தை இந்த நாடு வென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, மற்றைய நாடுகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து (மூன்று நாடுகளுக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு என்பது நன்றாகவே தெரியும் ஆனாலும் கிரிக்கட்டில் {எந்த game என்றாலும்} ஏதுமே சொல்லிக்கொன்டில்லை )
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளை இந்த பதிவில் ஒன்றாக அலச நினைத்தாலும் பாகிஸ்தானுக்கே பதிவு பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவில் மேற்கிந்தியதீவுகள் அணியை பற்றி விரிவாக அலசுவோம்.
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)
மேற்கிந்திய தீவுகள்
முதல் மூன்று உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு தேர்வான மேற்கிந்திய தீவுகள் அணி அவற்றில் முதல் இரண்டு உலக கிண்ண போட்டித்தொடர்களிலும் champion பட்டம் வென்று உலகின் முதல் ஒருநாள் போட்டிகளுக்கான உலக சாம்பியனாக தெரிவாகியமை வரலாறு. ஆனால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த உலக கிண்ண போட்டிகளில் சோபை இழந்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 3 உலக கிண்ண போட்டித் தொடர்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்ததுள்ளது . தான் வெற்றி பெற்ற இரண்டு உலகக் கிண்ணம் மற்றும் ஒரு சாம்பியன் கிண்ணம் என அனைத்து icc போட்டித் தொடர்களையும் இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை ஆசிய மைதானங்களில் சாதிக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இல்லாமல் இல்லை.
1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' போட்டிகளில் runner-up ஆக வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2002/2003 காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற 7 போட்டிகளில் 4:3 என தொடரை வென்றும் தனது முத்திரையை ஆசிய ஆடுகளங்களில் பதித்துள்ளது. ஆனாலும் அன்றிருந்த ஸ்திரமான மேற்கிந்திய தீவுகள் அணியாக இன்றைய மேற்கிந்திய தீவுகள் அணி இல்லை என்பதுதான் உண்மை; எனினும் கிறிஸ் கெயிலின் அபாரமான போம் (form), பிராவோ மற்றும் போலாட்டில் அதிரடியுடன் கூடிய சகலதுறை ஆட்டம், சந்திரப்போல் மற்றும் சர்வானின் அனுபவமான துடுப்பாட்டம், டரின் சாமியின் புதிய தலைமைத்துவ அணுகுமுறை, ரோச்சின் வேகம், டரின் பிராவோவின் (யூனியர் பிராவோ ) துடுப்பாட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு என அனுபவமும், இளம் இரத்தங்களும், புதிய திறமைகளும் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2011 உலகக் கிண்ண போட்டிகளில் எதிரணிகளுக்கு சிறந்த சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
கிறிஸ் கெயில்
சிவ்நாராயணன் சந்திரபோல்
ராம்நரேஷ் சர்வான்
டரின் பிராவோ
டுவைன் பிராவோ
கிரோன் போலாட்
டரின் சாமி (தலைவர்)
கால்டன் பௌக் (விக்கட் காப்பாளர்)
சுலைமான் பென்
ரவி ராம்போல்
கெமர் ரோச்
மிகுதி நால்வரும்
அட்ரியன் பரத்
நிகிர மில்லர்
அன்ரு ரசல்
டேவன் ஸ்மித்
*--------------------*
இங்கிலாந்து
மூன்று தடவைகள் உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியபோதும் ஒரு தடவையும் உலக கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்து அணி இறுதியாக இடம்பெற்ற T/20 உலககிண்ண போட்டிகளில் champion பட்டத்தை வென்று icc நடாத்தும் போட்டிகளுக்கான தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருந்தது. அது தவிர அவுஸ்திரேலிய மண்ணில் கிடைத்த தற்போதைய ஆஷஸ் வெற்றியும் இங்கிலாந்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டிகளில் சற்று தடுமாறினாலும் அண்டர்சன், ப்ரோட், ஸ்வான் என முன்னணி பந்துவீச்சாளர்கள் உலகக் கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியுடன் இணைவது அவர்களுக்கு பலமாக அமையும்.
ஆசிய ஆடுகளங்களில் அண்மைக்காலங்களில் பெரிதாக இங்கிலாந்து எதையும் சாதிக்காத போதும் இந்தியாவில் 2001/2002 இல் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் தொடரை 3:3 சமப்படுத்தியதோடு இலங்கையில் 2007/2008 இல் இடம்பெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை அவர்களால் ஆசிய ஆடுகளங்களில் கிண்ணத்தை வெல்ல முடியுமா? என்கின்ற கேள்விக்கு சரியான பதிலாக இருக்கும். ஸ்வானின் சுழல் இங்கிலாந்திற்கு மிகப்பெரும் பலமாக ஆமையும் அதேநேரம் சுழல் பந்து வீச்சிற்கு சிறப்பாக ஆடக்கூடிய பெல், பீட்டர்சன், கொலிங்வூட் போன்றோர் 2011 உலக கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இருப்பது இங்கிலாந்தின் 2011 உலகக் கிண்ண கனவை நிஜமாக்கினாலும் ஆச்சரியமில்லை.
அண்மைக் காலங்களில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்திற்காக வழங்கி வரும் அதே வேளையில் பந்துவீச்சாளர்களும் தங்களாலான பங்களிப்பை முடிந்தவரை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். முன்னர் எப்போது மில்லாதவகையில் போராட்டகுணம் இங்கிலாந்திடம் புதிதாக உருவாகியுள்ளமை ஆச்சரியமான மற்றும் இங்கிலாந்திற்கு மிகவும் சாதகமான விடயமாகும். 1992 க்கு பின்னர் அனைத்து துறைகளிலும் சிறப்பான முழுமையான ஒரு இங்கிலாந்து அணி தற்போது உருவாகியுள்ளமை இங்கிலாந்திற்கு முதல் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்குமா என்கின்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
அன்ட்ரு ஸ்ருவாஸ் (தலைவர்)
மாட் பிரியர் (விக்கட் காப்பாளர்)
ஜொனத்தன் ட்ரோட்
கெவின் பீட்டர்சன்
இயன் பெல்
இயோன் மோகன்
போல் கொலிங்வூட்
கிராம் ஸ்வான்
ஸ்டுவட் ப்ரோட்
டிம் ப்ரெஸ்னன்
ஜேம்ஸ் அண்டர்சன்
மிகுதி நால்வரும்
அஜ்மல் சஹ்சாட்
ஜேம்ஸ் ட்ரேட்வெல்
மிச்சேல் யார்டி
லுக் ரைட்
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 4)
நியூசிலாந்து
உலகக் கிண்ண வரலாற்றில் பெரிதாக எந்த சாகசங்களையும் இதுவரை நிகழ்த்தாத பழமையான இரு அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று, மற்றையது தென்னாபிரிக்கா. இதுவரை எந்த இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறாத நியூசிலாந்து 1975, 1979, 1992,1999, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் அறையிறுதிக்கு தகுதிபெற்ற போதும் அந்த ஐந்து அரையிறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்துள்ளது.
குறிப்பிட்ட ஐந்து அரையிறுதிப் போட்டிகளில் 1992 இல் பாகிஸ்தானுடனான அறையிருதிப் போட்டியில் 'மாட்டின் க்ரோ' அடித்த அற்புதமான 91 ஓட்டங்களால் நியூசிலாந்திற்கு கிட்டிய வெற்றி வாய்ப்பு யாருமே எதிர்பாராத வகையில் ஜாவிட் மியான்டாட்டின் அனுபவத்தினாலும், அன்றைய இளம் வீரர்களான 'இன்சமாம் உல் ஹாக்' மற்றும் 'மொய்ன் கானின்' அதிரடியாலும் பாகிஸ்தான் கைக்கு மாறியது நியூசிலாந்து ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது. அந்த போட்டித்தொடரில் நியூசிலாந்து தான் விளையாடிய எட்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே போட்டி இதுதான்.
1992 இன் பின்னர் ஸ்டீபன் பிளமிங்கின் தலைமையில் இளம் வீரர்களுடன் சர்வதேச கிரிக்கட்டில் புதிய அணுகு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அனைத்து முன்னணி அணிகளுக்கும் சவாலான அணியாக கடந்த உலக கிண்ண போட்டிகள்வரை (2007) சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. பிளெமிங் தலைமையில் கென்யாவில் இடம்பெற்ற icc யின் 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை நியூசிலாந்து கைப்பற்றியதை நியூசிலாந்தின் ஒருநாள் போட்டிகளின் உச்சக்கட்ட சாதனையாக சொல்லலாம்.
ஆனால் அதன் பின்னர் பிளெமிங், அஸ்டில், மக்மிலன், ஹெயின்ஸ், ஹரிஸ், பொன்ட் என அணியின் முக்கிய வீரர்களின் ஓய்வின் பின்னர் தற்போது நியூசிலாந்து அணி சிறிய அணிகளுடனான போட்டிகளில்கூட தடுமாறும் அணியாகவே உள்ளது. இன்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியிலுள்ள பெயர் சொல்லக்கூடிய ஒரு சில வீர்ர்கள் தனி மனித சாகசம் (one man show) நிகழ்த்தினால் தவிர நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளை வெல்வது சாத்தியமில்லாத விடயமாகியுள்ளது.
ஆனாலும் நியூசிலாந்து அணியில் அண்மைக்காலங்களில் தங்கள் தனித் திறமையால் போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவரக்கூடிய ரோஸ் ரெய்லர், ஜெசி ரெய்டர், பிரெண்டன் மக்கலம் போன்ற தனி மனித சாகசகாரர்களும் (one man army); அனுபவம் வாய்ந்த வீரர்களான ஸ்கொட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் போன்ற சகலதுறை வீரர்களும்; அனுபவமும் மிரட்டக் கூடிய சுழல் பந்துவீச்சு திறமையுமுடைய அணித்தலைவர் டானியல் வெட்டோரியும்; தன் டெக்னிக்கலான வேகப்பந்துவீச்சால் எதிரணிகளை நிலை குலைய வைக்கும் டிம் சௌதியும்; மார்டின் குப்டில், கன் வில்லியம்சன் போன்ற சிறப்பான போமிலிருக்கும் (in form) வீரர்களும் ஒன்றாக இணைந்துள்ள நியூசிலாந்து 2011 உலகக் கிண்ணத்தில் வலுவான அணியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
பிரெண்டன் மக்கலம் (விக்கட் காப்பாளர்)
ஜெசி ரெய்டர்
மார்டின் குப்டில்
ரோஸ் ரெய்லர்
ஸ்கொட் ஸ்டைரிஸ்
கன் வில்லியம்சன்
ஜேகப் ஓரம்
டானியல் விட்டோரி (தலைவர்)
நாதன் மக்கலம்
கையில் மில்ஸ்
டிம் சௌதி
மிகுதி நால்வரும்
ஜேம்ஸ் பிராங்க்ளின்
லுக் வூட்கோக்
ஜெமி ஹொ
ஹமிஸ் பென்னெட்
*--------------------*
தென்னாபிரிக்கா
உலகக் கிண்ண போட்டிகளில் துரதிஸ்டமான அணிஎன்றால் அது தென்னாபிரிக்காதான், மிகவும் திறமையான வீரர்கள் எப்போதும் அணியில் இருந்தபோதும் இதுவரை தென்னாபிரிக்காவால் ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு கூட செல்ல முடியவில்லை. அதிலும் 1999 உலகக் கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் குளூஸ்னரும் டொனால்டும் ஓடிய தவறான விக்கட்டுகளுக் கிடையிலான ஓட்டம் (runs between the wicket) தென்னாபிரிக்க ரசிகர்களால் மட்டுமல்ல குறிப்பிட்ட காலப்பகுதியில் கிரிக்கட் போட்டிகளை பார்த்த யாராலும் காலம் முழுவதும் மறக்க முடியாதது.
அதற்க்கு முன்னர் 1992 உலககிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துடனான போட்டியில் நான்கு விக்கட்டுகள் மீதமிருக்க 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டபோது தென்னாபிரிக்காவிற்கு 1 பந்தில் 21 ஓட்டங்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது, இதை தென்னாபிரிக்காவின் மோசமான துரதிஸ்டமாக சொல்லலாம்.
அதேபோல 1996 உலக கிண்ண போட்டிகளில் லீக் போட்டிகளில் தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்காவிற்கு மேற்கிந்திய தீவுகளுடனான காலிறுதிப் போட்டியில் பிரைன் லாராவின் அதிரடி சதம் தடைக்கல்லாக அமைந்தது. 94 பந்துகளில் 16 பவுண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களை குவித்த லாரா குறிப்பிட்ட போட்டியை தென்னாபிரிக்காவிடமிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கைகளுக்கு மாறினார். அதன் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளிலும் லீக் போட்டியொன்றில் தென்னாபிரிக்காவுடன் லாரா அடித்த சதம் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 2003 இல் இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றிவாய்ப்பு அருகாமையில் இருக்கும்போது (30 பந்துகளில் 40 ஓட்டங்கள்) மழை குறுக்கிட்டதால் போட்டி சமநிலையில் (tie (not draw )) முடிவடைய தென்னாபிரிக்காவின் அடுத்த சுற்றுப் பயணம் தடைப்பட்டது. கடந்த 2007 உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடியபோதும் அவுஸ்திரேலியாவின் பலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் அறையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய தென்னாபிரிக்கா இதுவரை 1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை மட்டுமே icc நடாத்திய போட்டிகளில் வென்றுள்ளது.
2011 உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை தென்னாபிரிக்கா முன்னைய உலகக் கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டதைப்போல மிகவும் பலமான அணியாக இல்லை என்பதுதான் உண்மை. ஆசிய ஆடுகளங்களில் அனுபவம் குறைவான வீரர்கள் ஆடுவது சாதகமான விடயமல்ல, குறிப்பாக சுழல் பந்துவீச்சை சமாளிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும், அதிலும் சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் மாக் பவுச்சர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமை ஆச்சரியமாக உள்ளது.
இதுவரை இலங்கை, இந்திய மண்ணில் தென்னாபிரிக்கா இதுவரை பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் (இலங்கையுடன் இலங்கையில் இறுதியாக விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி) இலங்கை, இந்திய ஆடுகளங்களை ஒத்த பங்களாதேஸ் ஆடுகளங்களில் 'மினி வேர்ல்ட் கப்' (mini world cup) கிண்ணத்தை வென்றதையும்; பாகிஸ்தான் மண்ணில் வைத்து 'பாகிஸ்தான் இண்டிப்பெண்டன்ஸ் கப்' (Pakistan independence cup) கிண்ணத்தை வென்றதையும் மறக்கமுடியாது.
தென்னாபிரிக்காவின் மிகப்பெரும் பலம் ஹசிம் அம்லாவின் அசுர போம் (form), 2011 உலகக் கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவிக்கும் வீரர்கள் பட்டியலில் அம்லாவின் பெயர் முன்னணியில் இடம்பிடிக்கும் சாத்தியம் அதிகம். அம்லா தவிர்த்து தென்னாபிரிக்காவின் பலமென்று கூறுவதானால் 'மோனே மோர்க்கல்' மற்றும் 'டேல் ஸ்டெயினின்' வேகத்தை குறிப்பிடலாம், ஆடுகளம் கொஞ்சம் ஒத்துளைத்தாலே போதும் இவர்கள் இருவரும் எதிரணிகளை திணறடித்து விடுவார்கள், அடுத்த தென்னாபிரிக்காவின் பலமென்று ஜோஹன் போத்தாவை குறிப்பிடலாம், இன்றைய தேதியில் உலகின் புத்தி சாதுரியமான சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் தனது வேரியேஷனான சுழல் பந்து வீச்சினால் தென்னாபிரிக்காவிற்கு நிச்சயம் பலம் சேர்ப்பார்.
தென்னாபிரிக்காவின் பலவீனம் என்று சொன்னால் அவர்களது துடுப்பாட்ட வரிசைதான்; அம்லா, கலிஸ் தவிர்த்து ஏனைய வீரர்களை எடுத்துக் கொண்டால் ஒன்றில் அவர்களது போம் (form) மோசமாக இருக்கிறது அல்லது ஆசிய ஆடுகளங்களில் (சுழல் பந்து வீச்சிற்கு) ஆடுவதற்கான அனுபவம் குறைவாக இருக்கிறது. உதாரணமாக சொல்வதானால் ஸ்மித், டீ வில்லியஸ் இருவரும் மோசமான போமில் (out of form) இருக்கும் அதே நேரம் சிறந்த போமில் (in form) இருக்கும் டுமினி, டூ ப்லீசிஸ், வான் வைக் போன்றவர்கள் ஆசிய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சிற்கு பரிச்சியம் குறைவானவர்களாக இருக்கின்றார்கள்.
இதே அணியில் அல்பி மோர்க்கலும் மார்க் பவுச்சரும் இருந்திருந்தால் தென்னாபிரிக்க அணி இன்னும் சிறப்பான அணியாக இருந்திருக்கும். ஆனாலும் ஸ்மித், டி வில்லியஸ் போமுக்கு (form) திரும்பும் பட்சத்தில் அவர்களுடன் அம்லா மற்றும் கலிஸ் இணைந்து சிறப்பான துடுப்பாட்டத்தினை அணிக்கு வழங்கினால் ஸ்டெயின், மோர்க்கல், போத்தா போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் துணைக்கொண்டு தென்னாபிரிக்கா உலக கிண்ணத்தில் இதவரை தவறவிட்ட சாதனையை சாதிக்கலாம்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
கிராம் ஸ்மித் (தலைவர்)
ஹசிம் அம்லா
மோனே வான் வைக்
ஜக் கலிஸ்
ஏ பீ டீ வில்லியஸ் (விக்கட் காப்பாளர்)
ஜே பி டுமினி
பப் டூ ப்லீசிஸ்
ஜோஹன் போத்தா
டேல் ஸ்டெயின்
மோனே மோர்க்கல்
லோன்வபோ சொட்சொபி
மிகுதி நால்வரும்
ராபின் பீட்டர்சன்
வைனே பார்னெல்
இம்ரான் தாகிர்
கொலின் இங்கிரம்
Monday, January 31, 2011
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5)
இலங்கை
1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சி தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சி தோல்வி' என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் இல்லை யென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்தி காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்க்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலக கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்கு பின்னர் கறிவேப்பிலையை போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸும், சனத்தும் உள்ளடக்கம்.
இலங்கை தேர்வுக்குழுவினர் சனத்தை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக் கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்த போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிஸ்டம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியிலாவது வாசினை அணியில் சேர்த்திருக்கலாம், ஆனால் வாஸ் சிறப்பாக பந்து வீசினால் தமது தேர்வு தவறாகிவிடும் என்கின்ற பயம் தேர்வாளர்களுக்கு.
நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் 'டில்ஹார பெர்னாண்டோ'வுக்கு பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாசா ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான 'சுராஜ் ரன்டிப்' நீக்கப்பட்டு 'ரங்கன கேரத்' சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பதை என்னைபோல இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் .அதேபோல உலகக் கிண்ண ஸ்பெசலிஸ்ட்டாக அணியில் இணையும் 'சாமர சில்வா' சென்ற உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே.
இப்படி அணியின் தேர்வுக்குழுவின் தேர்வின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலை கொடுக்க கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்ஷான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம். அதிலும் ஆசிய ஆடுகளங்களில் டில்ஷானின் அதிரடியை சமாளிப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். அதே நேரம் டில்ஷானுடன் களமிறங்கும் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 'உப்புள் தரங்கா'வை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்கக்காராவை அவளவு சீக்கிரத்தில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாரவதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் எதிரணி கதை அம்பேல்தான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களை பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்க கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல் போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.
நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் போம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் (in form) எதிரணிகள் பாடு திண்டாட்டமாகவும்; போம் மோசமாக இருக்கும் பட்சத்தில் (out of form) எதிரணிகள் பாடு கொண்டாட்டமாகவும் இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தை சேர்ந்த மஹேலாவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 & 2007 உலககிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலாவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிகளுக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் 'திலான் சமரவீரா'.
சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீரா ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் போட்டிகளை கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் 'அஞ்சலோ மத்யூஸ்' மற்றும் ஏழாம் இலக்கத்தில் 'திசர பெரேரா' இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர்.
பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலக கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியை சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய 'முரளிதரன்' மற்றும் 'லசித் மலிங்க'வுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய 'அஜந்த மென்டிஸ்' அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலகேகரவும்; சகதுரை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம்.
இவற்றைவிட சொந்த மண்ணில் முதற் சுற்று ஆட்டங்கள் இடம்பெறுவதும், அடுத்தகட்ட போட்டிகள் இந்திய ஆடுகளங்களில் இடம்பெறுவதும் இலங்கைக்கு சாதகமான விடயங்களே. ஆனாலும் பலமான இந்திய, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலக கோப்பை வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை காலிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் ஆயினும் அடுத்த நிலைகளை தாண்டி கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
திலகரட்னே டில்ஷான்
உப்புள் தரங்க
குமார் சங்ககார (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
மஹேல ஜெயவர்த்தன
திலான் சமரவீர
அஞ்சலோ மத்யூஸ்
திசர பெரேரா
நுவான் குலகேகர
முத்தையா முரளிதரன்
லசித் மலிங்க
அஜந்த மென்டிஸ்
மிகுதி நால்வரும்
சாமர கப்புகெதர
சாமர சில்வா
டில்ஹார பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 6)
இந்தியா
ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கட் மோகம் இருந்தாலும் இந்தியா அளவிற்கு கிரிக்கட்மீது வெறிகொண்ட ரசிகர்கள் வேறெந்த ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளிலும் இல்லை என்றே சொல்லலாம். வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களை கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளை சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிக்கட்டின்மீது அதீத ஈடுபாடு உடையவர்கள். இப்படி கிரிக்கட்டை ஒரு மதமாகப் பார்க்கும் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு சொந்த நாட்டிலே உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறும்போது உணர்வு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1983 முதல் 28 ஆண்டுகளாக உலகக் கிண்ண கனவுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கும்; ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கான அதிகமான சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மணிமகுடமாகவும் இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது.
பலமான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 1983 இல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இந்தியா அதன் பின்னர் icc நடாத்திய சுற்றுப் போட்டிகளில் இலங்கையுடன் 2002 இல் இணை சாம்பியனாக கிண்ணத்தை பகிர்ந்து கொண்டதுடன்; icc யின் முதல் T/20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது. 2003 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணிக்கு கிண்ணத்தை வெல்வதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. அதேபோல அடுத்த உலக கிண்ண போட்டிகளில் (2007) அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு பங்களாதேஷ் முட்டுக் கட்டையாக இருக்குமென்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 2003 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் வெளியேற்றம் பல முன்னணி வீரர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது நினைவில் இருக்கும் என்பதால் இம்முறை இந்தியர்கள் மிகவும் அவதானமாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.
இந்திய அணியின் மிகப்பெரும் பலம் என்று சொல்வதென்றால் அது அவர்களின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசைதான். 2011 உலகக் கிண்ண அணிகளுள் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசை என்று இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை குறிப்பிடலாம். அணியிலுள்ள 8 துடுப்பாட்ட வீரர்களில் ஏழு வீரர்களை அணியில் தெரிவு செய்வதே அணித் தேர்வின்போது மிகவும் சிரமமான விடயமாக இருக்கும் என்பதில் இருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொசிஷனுக்கும் ஏற்றால்ப்போல சிறப்பான வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் இருப்பது இன்னமும் சிறப்பு.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இன்றைய தேதியில் உலகின் சிறந்த ஜோடியான சச்சின் டெண்டுல்க்கர் மற்றும் வீரேந்திர சேவாக். இவர்கள் இருவரையும் பற்றி என்ன சொன்னாலும் அது எல்லோருக்குமே தெரிந்த விடயமாகத்தான் இருக்கும் என்பதால் இவ்விருவரையும் பற்றி அதிகமாக சொல்லத்தேவை இல்லையென்றாலும் ஷேவாக்கை முதல் பத்து ஓவர்களுக்குள் வெளியேற்றத் தவறினால் ஏற்ப்படும் விளைவையும் சச்சின் தனது முழுமையான இனிங்க்ஸ் ஒன்றை வெளிப்படுத்துவதால் ஏற்ப்படும் விளைவையும் எதிரணிகள் அறியாமல் இல்லை என்பதால் இந்தியாவுடனான போட்டிகளில் இவ்விருவரையும் வெளியேற்று வதற்குத்தான் எதிரணியினரின் அதிக சிரத்தை எடுப்பார்கள்.
வேகம், சுழல் பந்து வீச்சுக்களுக்கும்; ஓப் (off side), ஓன் (on side) திசைகளிலும்; நேர்த்தியாகவும், வேகமாகவும்; போட்டியின் தன்மைக்கேற்ப துடுப்பாடக்கூடிய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான 'கௌதம் கம்பீர்' மூன்றாம் இலக்கத்திற்கு வலுச்சேர்க்கும் அதேநேரம் இன்னுமொரு எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மிகச்சிறந்த போமிலிருக்கும் (form) 'வீராட் கோளி' நான்காம் இலக்கத்திற்கு சிறப்பான வீரராக இருப்பார். நான்காம் இலக்கத்திற்கு அன்பவம் குறைவான வீரராக 'கோளி' இருப்பினும் அதுவே அவருக்கு அழுத்தமில்லாமல் ஆடுவதற்கு எதுவாக அமைந்துவிடும் என்பதால் 'கோளி' நான்காம் இலக்கத்திற்கு சரியான தெரிவாக இருப்பார்.
ஐந்தாம் இலக்கத்திற்கு 'யுவராஜ் சிங்'கை அணியில் இணைப்பதா அல்லது 'சுரேஷ் ரெய்னா'வை இணைப்பதா என்பதுதான் பிரச்சனையே. யுவராஜ் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த வீரராக இருப்பினும் 'ரெய்னா' மீதுதான் 'டோனி'யும் ரசிகர்களும் அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பதால் ஐந்தாம் இலக்கத்தில் 'ரெய்னா'வே விளையாடும் சந்தர்ப்பம் அதிகம் என்றாலும் எனது தெரிவு 'யுவராஜ் சிங்'தான். அன்றைய நாள் அவர்களுடையதாக அமையும் பட்சத்தில் 'ரெய்னா'வை விட 'யுவராஜ் சிங்'கின் இனிங்க்ஸ் மிரட்டக்கூடியதாக அமையும் என்பது யாராலும் மறுக்கமுடியாதது. அடுத்து கையைவிட்டுப் போன ஒரு போட்டியை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டுவரும் ஆற்றல் படைத்த ஒரே வீரர் யுவராஜ்தான் என்பதாலும் யுவராஜ் அணியில் இருப்பது இந்திய அணிக்குத்தான் சிறப்பு.
ஆறாம் இலக்கத்தில் 'டோனி' இன்று சிறந்த போமில் (form) இல்லாதது இந்தியாவிற்கு பாதகமான விடயமாக இருந்தாலும் டோனி போன்ற வீரர்களுக்கு போமாக (form) ஒரு போட்டி போதும் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 'டோனி'யுடன் சேர்ந்து பினிஷிங் கொடுப்பதற்கு 'யூசப் பதான்' ஏழாம் இலக்கத்தில் களமிறங்குவதும்; எட்டாம் இலக்க வீரராக களமிறங்கும் ஹர்பஜனின் அதிரடியும் இந்திய துடுப்ப்பாட்ட வரிசையின் பலமான விடயங்கள். ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை கட்டுபடுத்துவது எதிரணியினருக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமேதுமில்லை .
துடுப்பாட்டத்தில் இந்திய அணி எப்படி பலமாக உள்ளதோ அதற்க்கு நேர்மாறாக பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலவீனமாக உள்ளதுதான் இந்திய அணியின் பிரச்சனையே. சஹீர்க்கான், ஹர்பஜன் சிங்; இவ்விருவரையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் சிறப்பாக பந்துவீசும் சஹீரை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. ஆனால் ஹர்பஜன் ஆசிய ஆடுகளங்களில் எதிரணியினருக்கு மிகுத்த சவாலாக இருப்பார். ஆசிஸ் நெஹரா, பிரவீன் குமார், முனாப் பட்டேல் போன்றவர்களை அன்றைய நாள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்பமுடியும். ஆசிய நாடுகள் தவிர்த்து ஏனைய நாடுகளுடனான போட்டிகளில் அஸ்வினை அணியில் இணைப்பது இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும். களத்தடுப்பு; ஆயிரம் பெரியார் வந்தாலும்...... போன்ற மேட்டர்தான்.
மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா குவிக்கும்போது கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். ஆனாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் (அப்படித்தான் அமைப்பார்கள் என்று நம்பலாம்) இந்தியா ஓட்டக் குவிப்பாலும் சஹீர், ஹர்பஜன் மற்றும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர்களான ஷேவாக், யூசப், சச்சின், யுவராஜ்/ரெய்னா போன்றவர்களினது துணையினாலும் எதிரணியினருக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்பலாம். 2011 உலக கிண்ணத்தை வெல்வதற்கு சாத்தியமான அணி என்று பலராலும் ஆரூடம் கூறப்படும் இந்தியா; இந்ததடவை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ள அணிகளில் முதன்மையானது என்பதை மறுப்பதற்கில்லை.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
சச்சின் டெண்டுல்க்கர்
வீரேந்திர சேவாக்
கௌதம் கம்பீர்
வீராட் கோளி
யுவராஜ் சிங்
மகேந்திரசிங் டோனி (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
யூசப் பதான்
ஹர்பஜன் சிங்
சஹீர் கான்
ஆசிஸ் நெஹரா
முனாப் பட்டேல்
மிகுதி நால்வரும்
சுரேஷ் ரெய்னா
ரவிச்சந்திரன் அஷ்வின்
பியூஸ் சாவ்லா
பிரவீன் குமார்
உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 7)
2011 உலகக் கிண்ணத்தை ஜெயிக்கப் போவது யாரு?
பதின்நான்கு நாடுகள் பங்கேற்க, ஆங்கில காலணித்துவத்தின் கீழிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கட் ரசிகர்கள் காத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது 10 ஆவது உலககிண்ண கிரிக்கட் போட்டிகள். கிரிக்கட் பற்றி பேசுபவர்களும், கிரிக்கட் பற்றி எழுதும் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களும், கிரிக்கட் சூதாட்ட இணையதளங்களும் இப்போது பேசும் or அலசும் முக்கியமான விடயம் எந்த அணி 2011 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்பதுதான். அந்த வகையில் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பதை பற்றிய பார்வைதான் இப்பதிவு.
லீக் ஆட்டங்கள் (குறிப்பிட்ட ஒருபிரிவில் இருக்கும் ஒரு அணி ஏனைய அனைத்து அணிகளுடனும் மோதும்) இடம்பெறும் எந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியாக இருந்தாலும் எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று கேட்டால் அதற்க்கு ஒரு அணியின் பெயரை சொல்வதென்பது ஒரு குறிப்பிட்ட அணியின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கை or அச்சத்தின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதேநேரம் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளில் இருந்து முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் என்று நினைக்கும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு அவற்றிலிருந்து ஏதாவதொரு அணிதான் கிண்ணத்தை கைப்பற்றும் என்று கூறுவது ஓரளவு ஊகிக்கக் கூடிய விடயமாக இருக்கும். அவ்வாறு ஊகம் கூறும் சந்தர்ப்பங்களில் நான்கில் இரண்டு அணியாவது அரையிறுதிக்கும் ; அவற்றில் ஒரு அணியாவது இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
மேற்குறிப்பிட்டது போல லீக் ஆட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் நான்கு அணிகளை தெரிவு செய்வதற்கு ஏதுவாக போட்டி அட்டவணைகள் icc யினால் அறிமுகப் படுத்தப்பட்டது 1999 உலக கிண்ண போட்டிகளில்தான். A பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள், B பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள் என முதலில் இடம்பெற்ற லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 6 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு அதாவது SUPER 6 போட்டிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டு அவற்றில் இருந்து முதல் நான்கு புள்ளிகளை பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
A பிரிவில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாவே, கென்யா ஆகிய ஆறு அணிகளில் இருந்து தென்னாபிரிக்கா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்றன. பின்னர் SUPER 6 போட்டிகளில் இடம்பெற்ற லீக் ஆட்டங்களில் முதல் நான்கு இடங்களை பெற்ற பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா பாகிஸ்தானை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
இந்த சுற்றுப்போட்டியில் முதல் சுற்றில் சிம்பாவே அணி இலங்கை மற்றும் இங்கிலாந்தை பின்தள்ளிவிட்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும், SUPER 6 போட்டிகளில் இந்தியாவை பின்தள்ளிவிட்டு நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் முன்னரே எதிர்வு கூறப்பட்ட பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன.
2003 உலககிண்ண போட்டிகளில் A பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே, இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், கென்யா, பங்களாதேஷ், நியூசிலாந்து, கனடா அணிகளில் இருந்து இலங்கை, கென்யா, நியூசிலாந்து அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்று அவற்றில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, கென்யா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி SUPER 6 போட்டிகளுக்கு தகுதி பெறாததும்; சிம்பாவே மற்றும் கென்யா அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு முன்னேறியது எதிர்பாராத விடயங்களாக அமைந்தன. சிம்பாவே பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தடைப்பட்டதாலும் இங்கிலாந்து அணி சிம்பாவே செல்லாததும் சிம்பாவே அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக காரணமான அதேவேளை; இலங்கையுடன் கிடைத்த எதிர்பாராத வெற்றியும் நியூசிலாந்து அணி கென்யா செல்லாமையும் கென்யாவை SUPER 6 போட்டிகளுக்கு கொண்டு சென்றது.
2003 உலகக் கிண்ண போட்டிகளில் ஒரே குழுவிலிருந்து SUPER 6 போட்டிகளுக்கு சென்ற அணிகளுக்கு SUPER 6 லீக் ஆட்டங்களில் போட்டிகள் இடம்பெறாமல் முன்னைய லீக் போட்டிகளில் பெறப்பட்ட புள்ளிகளே சேர்க்கப்பட்டதனால் இலங்கையுடன் முன்னைய சுற்றில் கிடைத்த புள்ளிகளும், நியூசிலாந்து அணி கென்யா செல்லாத காரணத்தால் கிடைத்த புள்ளிகளும், கூடவே SUPER 6 போட்டிகளில் சிம்பாவே அணியுடனான வெற்றியால் கிடைத்த புள்ளிகளும் சேர்ந்து கென்யா அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றன.
2007 உலகக் கிண்ண போட்டிகளில் A,B,C,D என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பிரிவில் இருந்து 2 அணிகள் SUPER 8 போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டன. A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவும்; B பிரிவில் இலங்கை, இந்தியா, பெர்முடா, பங்களாதேஷ் அணிகளில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும்; C பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா அணிகளில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும்; D பிரிவில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, சிம்பாவே அணிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளும் SUPER 8 போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்தன.
பின்னர் SUPER 8 போட்டிகளில் அதிகப்புள்ளிகளை பெற்ற அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி பின்னர் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இந்த உலக கிண்ண போட்டிகளில் மிகப்பெரும் அதிர்ச்சியாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தாலும்; பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.
இப்படியாக 1999 - 2007 வரையான உலக கிண்ண போட்டிகளில் SUPER 8 or 6 போட்டிகள் இடம்பெற்றமையால் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளை ஓரளவு எதிர்வு கூறக் கூடியவாறு இருந்தது, அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளில் மூன்று அல்லது இரண்டு அணிகளாவது அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன. ஆனால் இதற்க்கு முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் 1992 இல் இடம்பெற்ற போட்டித்தொடர் தவிர்ந்த ஏனைய எந்த தொடரிலும் அனைத்து முன்னணி அணிகளையும் சந்திக்கும் லீக் ஆட்டம் இடம்பெறவில்லை.
1992 இல் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடரில் முக்கிய அணிகள் அனைத்தும் ஒன்றையொன்று சந்திக்கும் லீக் ஆட்ட முறையில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து அதிக புள்ளிகளை பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டன. ஒரே குழுவில் இடம்பெற்ற 9 அணிகளும் இதர 8 அணிகளுடனும் மோதியதில் அதிக புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
அதற்க்கு முன்னர் 1975 - 1987 வரையான நான்கு உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் A,B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் உள்ள நான்கு அணிகளும் தமக்குள்ள மோதி முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவு செய்வது வழக்கம். இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடர் (4 போட்டித்தொடர்கள்) ஒவ்வொன்றிலும் தலா 15 போட்டிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட உலகக் கிண்ண போட்டித் தொடர்கள் அனைத்திலும் இருந்து வேறுபாடும் உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலகக் கிண்ண போட்டித்தொடர் அமைந்தது. A,B என இரு பிரிவுகள்; ஒவ்வொரு பிரிவிலும் தலா ஆறு அணிகள் தத்தமக்குள் மோதி அவற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் அடுத்த சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலே சுற்றுப்போட்டியை விட்டு வெளியேறும் Knockout முறையில்தான் போட்டிகள் இடம்பெற்றன. கால் இறுதிப் போட்டிகள் இடம்பெற்ற ஒரே உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலககிண்ண போட்டித்தொடர் மட்டும்தான் இதுவரை இருந்துள்ளது. ஆனால் இப்போது இரண்டாம் முறையாக கால் இறுதிப் போட்டிகள் இடம்பெறும் உலக கிண்ண போட்டித்தொடராக 2011 உலகக் கிண்ண போட்டித்தொடரும் இணையப்போகின்றது.
2011 உலக கோப்பை அட்டவணையின்படி A பிரிவில் அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, சிம்பாவே, கனடா, கென்யா என ஏழு அணிகளும்; B பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து என ஏழு அணிகளும் தத்தமது குழுக்களில் அனைத்து அணிகளுடனும் மோதிக்கொள்ளும். இவற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அடுத்த கட்டமாக காலிறுதிப் போட்டிக்கு (Knockout ) தகுதிபெறும்; அதன் பின்னர் அரையிறுதி, இறுதி போட்டிகள் இடம்பெறும்.
இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறும் 8 அணிகளும் SUPER 6 or SUPER 8 போட்டிகள் இடம்பெறாமையால் நேரடியாக காலிறுதி போட்டியில் ஆடுவதால்; முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் 8 அணிகளில் 4 அணிகள் அடுத்து இடம்பெறும் போட்டியில் (காலிறுதி) தோல்வியடைந்தாலே உலகக் கிண்ண கனவை மறக்க வேண்டியதுதான். தலா ஒரு போட்டியில் நான்கு முக்கிய அணிகள் தொடரைவிட்டு வெளியேறுவதால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணிப்பது கடினமான விடயம்.
முதல் சுற்றில் ஒரு குழுவில் 7 அணிகள் இருந்தாலும் அவற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்கு அணிகளை சுலபமாக கணிக்கலாம். A பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் B பிரிவிலிருந்து இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் அதிகமாக முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் அணிகளாக இருக்கும். பங்களாதேஸால் மட்டும்தான் தன குழுவில் உள்ள ஏதாவதொரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளது எனினும் அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவே.
ஆக மொத்தத்தில் காலிறுதியில் மேற்குறிப்பிட்ட 8 அணிகளும் யார்யாருடன் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்காகவும், ஆட்டத்தொடரின் நாயகனை தீர்மானிப்பதற்காகவும் தான் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 2007 உலகக் கிண்ணம் கொடுத்த பாடம்தானோ என்னமோ (இந்திய பாகிஸ்தான் வெளியேற்றம்) இந்த தடவை 4 or 2 குழுக்களில் இருந்து 6 or 8 அணிகளை தேர்வுசெய்து SUPER 6 or 8 போட்டிகள் நடாத்தப்படவில்லை. முதற் சுற்று ஆட்டங்களில் முக்கிய அணிகளில் இரண்டு வெளியேறினால் SUPER 6 or 8 போட்டிகள் சோபை இழந்துவிடும் என்பது icc யின் இந்த போட்டி அட்டவணை மாற்றத்திற்கான காரணமாக இருப்பினும் ஒரே போட்டியில் 4 முக்கிய அணிகள் வெளியேறுவதால் சிறப்பாக முதல் சுற்றில் ஆடிய ஒரு அணி அரையிறுதிக்கு முன்னரே ஒரு போட்டியில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
1996 இல் லீக் போட்டிகள் அனைத்திலும்(5) வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அடுத்த போட்டியான காலிறுதிப் போட்டியில் (Knockout) லாராவின் one man show வினால் மேற்கிந்திய அணியிடம் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேறியது. அதே போன்ற நிலை இந்த 2011 உலகக் கிண்ண போட்டித்தொடளிலும் இடம்பெறலாம்!!. தமது குழுக்களில் முதல் இரு இடங்களுக்குள்ளும் வரும் என்று பலராலும் எதிர்வு கூறப்பட்ட இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா போன்ற அணிகள் (இவைதான் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் என்று பலரும் ஆரூடம் கூறும் முக்கிய அணிகள்) அடுத்த போட்டியில்; அதாவது காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளால் வீழ்த்தப்பட்டால் உலகக் கோப்பை கனவை மறக்க வேண்டியதுதான்.
காலிறுதிப் போட்டியில் முன்னணி அணிகளுக்கு அன்றைய நாள் நன்றாக அமையாவிட்டால் என்ன செய்ய முடியும்? one man show, சிறந்த துடுப்பாட்ட இணைப்பாட்டம், சிறப்பான team work என ஏதாவதொரு சிறப்புகாரணி பலம் குறைந்தவை என்று கூறப்படும் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கைகொடுக்க; பலமான அணிகளாக கணிக்கப்படும் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கு அன்றைய நாள் சொதப்பலாக (அதாவது மோசமான துடுப்பாட்டம், மோசமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு, batting collapse, நடுவரின் தவறான தீர்ப்பு, run out போன்ற காரணிகள்) அமைந்தால் குறிப்பட்ட முன்னணி அணிகளது உலககிண்ண கனவு காலிறுதியிலேயே முடிவடைந்து விடும்.
உதாரணமாக சொல்வதானால் கிறிஸ் கெயில் கோர தாண்டவம் ஒன்று ஆடினால் எந்த எதிர் அணியினாலாவது தாக்குபிடிக்க முடியுமா? மேற்கிந்திய தீவுகளில் கெயில் தவிர போலாட்; இங்கிலாந்தின் பீட்டர்சன், ஸ்வான் (பந்துவீச்சு); நியூசிலாந்தின் டெய்லர், ரெய்டர், மக்கலம் விட்டோரி(பந்துவீச்சு); பாகிஸ்தானின் அப்ரிடி, ரசாக், அக்தர்(பந்துவீச்சு ) என போட்டியை தங்கள் அணிக்கு சார்பாக மாற்றக்கூடிய வீரர்களுக்கு அன்றையநாள் வாய்த்துபோனால் அவுஸ்திரேலியாவும் ஒன்றும் செய்ய முடியாது இந்தியாவும் ஒன்றும் செய்ய முடியாது. காலிறுதி, அரையிறுதி , இறுதி மூன்று Knockout கட்டங்களை தாண்டித்தான் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதால் எந்த பலமான அணியாக இருந்தாலும் ஒரு Knockout போட்டியில் மேலே குறிப்பிட்டதுபோல எதிரணியினர் சவாலை கொடுத்தால் கிண்ணக் கனவை அடுத்த உலகக் கிண்ணம் வரை ஒத்திவைக்க வேண்டியதுதான்.
இப்ப சொல்லுங்க, எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று எதிர்வு கூறமுடியுமா? கடந்த 3 உலகக் கிண்ண போட்டிகளிலாவது அரையிறுதிக்கு தேர்வாகும் என்று நம்பும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு இவற்றில் ஏதாவதொன்று என்று கூறலாம், ஆனால் இந்தத் தடவை அதற்கும் சாத்தியமில்லை. கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எதுவென்பதை சித்திரை இரண்டாம் திகதிவரை மிகுந்த எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், ஒருவித பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.
ஆஸ்திரேலியா கிரிக்கட் அணி 1999 முதல் இன்றுவரை...
1999 - 2007 வரை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் உலகையே தங்கள் அசாத்திய திறமையால் கிறங்கடித்த அணி; ஆஸ்திரேலியா போல் வேறொரு அணி எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்கின்ற கேள்விக்கு 'இல்லை' எனும் டெம்ளேட் பதிலை ஓட்டுமொத்த பேரையும் சொல்லவைத்த அணி; துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு என மூன்று பிரிவுகளிலும் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு போட்டி வகைகளிலும் எதிரணிகளை துவைத்து காயப்போட்ட அணி; இன்று இருக்கும் நிலை என்ன? இன்றும் வீழ்த்தப்பட முடியாத அணியா? அல்லது ஏனைய முன்னணி அணிகளுடன் சமபலமான அணியா? இல்லை எல்லா அணிகளாலும் இலகுவாக வீழ்த்தப்படகூடிய அணியா?
ஒருநாள் போட்டிகள்
1999 உலக கிண்ண போட்டிகளின் 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் வரை ஏனைய முன்னணி அணிகளுடன் சமபலத்தில் இருந்து வந்த அவுஸ்திரேலியா தென்னாபிரிக்காவுடனான 'சூப்பர் சிக்ஸ்' போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் ஸ்டீவ் வோவினுடைய இலகுவான பிடியை தவறவிட்ட தருணத்தில் இருந்து அதிஷ்டத்துடன் கூடிய அசுர வளர்ச்சிக்கு அத்திவாரமிட ஆரம்பித்தது.
குறிப்பிட்ட 'சூப்பர் சிக்ஸ்' போட்டியில் ஸ்டீவ் வோவின் சதத்தின் மூலம் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாவிற்கு வோனின் சுழலும் குளூஸ்னரின் தவறான விக்கட்டுகளுக் கிடையிலான ஓட்டத் தெரிவின் மூலமான அதிஸ்டமும் கை கொடுக்க அரையிறுதியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் பலம் மிக்க பாகிஸ்தானை இலகுவாக வென்று தனது அசுர வளர்ச்சியை ஆரம்பித்தது.
1999 உலக கிண்ண வெற்றிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தை பொறுத்தவரை முன்வரிசையை கில்கிறிஸ்ட், மார்க் வோ, பொண்டிங் போன்றோர் பலப்படுத்த; மத்திய வரிசையை மார்டின், ஸ்டீவ் வோ, லீமன், பெவன் போன்றோர் கவனித்துக்கொள்ள பந்து வீச்சில் மக்ரா, வோனுக்கு துணையாக கிலப்சி மற்றும் புதுமுகம் பிரெட் லீ இணைய முழுப்பலம் பொருந்திய ஒருநாள் அணியாக அவுஸ்திரேலியா உருவெடுத்தது.
1999 - 2007 வரை மார்க் வோ விற்கு பதிலாக ஹெய்டனும், மார்டினுக்கு பதிலாக கிளாக்கும், லீமனுக்கு பதிலாக சைமன்சும், பெவனுக்கு பதிலாக ஹசியும், வோனுக்கு பதிலாக பிரட் ஹோக்கும் மாற்றீடாக அணிக்குள் நுழைந்தாலும் முன்னவர்களது பணியை எந்தவித குறையுமில்லாமல் நிவர்த்தி செய்தனர். இவர்களை தவிர டேமியன் பிளமிங், இயன் ஹாவி, ஷேன் லீ, நாதன் பிராக்கன், அண்டி பிக்கல், ஷேன் வொட்சன், மைக்கல் காஸ்ப்ரோவிக், ஸ்டுவட் கிளாக், சைமன் கட்டிச் போன்றோரும் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவுஸ்திரேலியாவிற்கு வலு சேர்த்தனர்.
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாகிஸ்தான் தவிர்த்து (பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா செல்லவில்லை) ஏனைய டெஸ்ட் அந்தஸ்துள்ள அனைத்து நாடுகளிலும் ஒருநாள் தொடரை வென்றுள்ள அவுஸ்திரேலியா 3 உலக கிண்ணங்களையும் ஒரு ICC சாம்பியன் கிண்ணத்தையும் அக்காலப்பகுதியில் கைப்பற்றியிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தென்னாபிரிக்காவில் 2 ஒருநாள் போட்டி தொடர்களையும் இலங்கை மற்றும் நியூசிலாந்தில் தலா 1 ஒருநாள் போட்டித் தொடரையும், 3 ICC சாம்பியன் கிண்ணத்தையும் மட்டுமே இழந்திருந்த அவுஸ்திரேலியா மிகுதி அனைத்து போட்டித்தொடர்களையும் கைப்பற்றியிருந்தது.
சொந்த நாட்டில் தென்னாபிரிக்கா (2001/2002) மற்றும் இங்கிலாந்திடம் (2006/2007) தலா ஒரு தடவை முக்கோண தொடரையும், பாகிஸ்தானிடம் ஒருநாள் போட்டித்தொடர் ஒன்றையும் இழந்ததை தவிர மிகுதி அனைத்து தொடர்களையும் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா உலக நாடுகளின் தெரிவு அணிக்கெதிரான 3 போட்டிகளையும் வென்று ஒட்டுமொத்த நாடுகளுக்கும் தனியாளாக பதில் சொல்லியது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் உச்சக்கட்ட பங்களிப்பை வழங்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புச்சானன் சிறந்த பயிற்ச்சியாளராக கூடுதல் உதவி புரிந்தார்.
இப்படியாக பொசிடிவ் அப்ரோச் மூலம் உலக அணிகளை கிறங்கடித்த 'வீழ்த்தப்பட முடியாத' கொடிகட்டி பரந்த அவுஸ்திரேலியா அணியின் 2007 க்கு பின்னர் இன்று வரையான ஒருநாள் போட்டிகளின் சறுக்களுக்கு முதல் காரணம் பந்து வீச்சு வரிசையின் வீழ்ச்சிதான் என்றால் மிகையில்லை. கிளன் மக்ராத்தின் ஓய்வு, பிரட்லீயின் உபாதை, கிலப்சி மற்றும் பிராக்கனின் திறன் குறைவடைந்தமை போன்ற காரணிகள் அவுஸ்திரேலியாவின் பலம் மிக்க பந்துவீச்சு வரிசையை ஆட்டம் காண செய்தது. அதற்க்கு பின்னர் பல வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தாலும் யாரும் இவர்களுடைய இடத்தை நிரப்ப முடியவில்லை.
சுழல் பந்துவீச்சில் வோனின் இடத்தை சிறப்பாக நிவர்த்தி செய்து வந்த பிரட் ஹோக்கின் ஓய்வுக்கு பின்னர் இன்றுவரை சரியான சுழல் பந்து வீச்சாளர் அமையாதது அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு வரிசைக்கு மேலும் சோதனையாக உள்ளது. குரூக்ஸ், ஸ்மித் போன்ற பந்து வீச்சாளர்கள் ஒப்புக்கு பந்தை சுழற்றினாலும் வோர்ன் மற்றும் ஹோக்கின் இடத்திற்கு சரியான நபர் இன்னமும் அவுஸ்திரேலியாவிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை, இதில் சோகம் என்னவென்றால் அப்படி ஒரு பந்து வீச்சாளர் பிராந்திய அணிகளிலும் இல்லாததுதான். இனிவரும் காலங்களில் இளம் வீரர் யாராவது உருவாகும் வரை சுழல் பந்துவீச்சு அவுஸ்திரேலியாவிற்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கபோகிறது என்று தோன்றுகிறது.
இன்றைய அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜோன்சன், ஹரிஸ், போலிங்கர், மிக்கி, ஹெல்பன்ஹவுஸ், சிட்டில், நானிஸ் போன்றோர் அவுஸ்திரேலிய அணியில் சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்பட்டாலும் இவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான பெறுதியை ஒருவராலும் கொடுக்க முடிவதில்லை. இவர்கள் அனைவரும் திறமையானவர்களாக இருந்தும் அவர்களால் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச முடியாமல் இருப்பதற்கு இன்றைய ஆடுகளங்களின் அமைப்பும், ஆட்டத்தின் போக்குமே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இவர்களுக்கு மட்டுமல்ல இன்று அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் இதுவொரு மிகப்பெரும் பிரச்சினைதான்!!!
அதிக ரசிகர்களை கவர்வதற்காக போடப்படும் மட்டமான 'பிட்ச்' களும், குறுந்தூர எல்லை கோடுகளும் இன்றைய பந்து வீச்சாளர்களுக்கு சாபக்கேடாக மாறியிருக்கிறது. ஒரு நாள் போட்டியே இரு இனிக்சாக மாற்றி கொலைவெறி ஆட்டத்தை ஆடும் முதல்தர கிரிக்கட்டும், T/20 கிரிக்கட் போட்டிகளும் பந்து வீச்சாளர்கள் கிழித்து நார்நாராக தொங்க விடுகின்றன. இப்படி அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் இருக்கும் பிரச்சினைதான் இன்றைய திறமையான அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் இருக்கின்றது; இதனால்தான் இவர்களால் மக்ரா, லீ, கிலேப்சியின் அளவிற்கு பந்துவீச முடிவதில்லை.
அதே போல் துடுப்பாட்டத்தில் 'ஸ்ட்ரோக் மேக்கிங்'கிற்கு மரியாதை போய் டப்பாங்கூத்து ஷோட்களுக்கு பெறுமதி வந்ததால் இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளுக்கு கிளாசை விட மாஸ்தான் தேவைப்படுகிறது. இதனால் முன்னர் 50 ஓவர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல வீரர்கள் இன்றைய காலத்திற்கு ஏற்றால்ப் போல தங்களை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். இப்படி இன்றைய வேகத்துக்கு மாற அவுஸ்திரேலியாவின் பொண்டிங், கிளாக் போன்ற வீரர்கள் சிரமப்பட்டாலும் டேவிட் ஹசி, வைட், வொட்சன், ஹடின், வோனர் போன்ற வீரர்கள் இன்றைய ஒருநாள் போட்டிகளுக்கான தகுதியான வீரர்களாக உள்ளமை அவுஸ்திரேலியாவிற்கு அறுதல். ஆனாலும் கில்கிறிஸ்டின் இடம் இன்னமும் முழுமையாக நிரப்பப் படவில்லை என்பது அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசைக்கு சிறு பின்னடைவே!!!
1999 -2007 வரை வீழ்த்தப்படாமல் இருந்த அவுஸ்திரேலியா அணி இன்று அந்த நிலையில் இல்லை என்றாலும் இன்றைய முன்னணி அணிகளால் சுலபமாக வீழ்த்தப்படும் நிலையிலும் அது இல்லை என்பதே உண்மை. இன்றைய எந்த முன்னணி அணியுடனும் மோதுவதற்கு சமபலத்துடன் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டிகளை வெல்வதற்கு ஏனைய அணிகள் தொடர்ந்தும் போராட வேண்டித்தான் இருக்கும். இன்று சற்று அதிகமாகவே பின்னடைவு உள்ளதாக தோன்றினாலும் நிச்சயம் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அவுஸ்திரேலியா இன்னமும் முதல்தரமான அணிதான். ஆனால் 1999 -2007 வரை இருந்ததைப்போல இன்னொரு தடவை 'வீழ்த்தப்படாத அணியாக' மாறுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றுமட்டும் அடித்து கூறலாம்.
முன்னர்போல ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை சுவைக்க முடியாவிட்டாலும் ஏனைய அணிகளைவிட அதிகமான வெற்றிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் சுவைக்கும்!!!!!
டெஸ்ட் போட்டிகள்
1999 ஆம் ஆண்டு இலங்கையில் 1:0 என டெஸ்ட் தொடர இழந்த அவுஸ்திரேலியா அடுத்து இந்தியாவில் கொல்கத்தா டெஸ்டில் தோல்வியடையும் வரை ஜிம்பாவே, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியதீவுகள், நியூசிலாந்து அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாடிய 16 போட்டிகளையும் வென்று இலகுவில் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனையை நிலை நாட்டியது. அப்போதிலிருந்து 2007 ஆசஸ் வரை டெஸ்ட் கிரிக்கட்டையே தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அவுஸ்திரேலியா வைத்திருந்தது.
ஹெய்டன், ஸ்லேட்டர், லாங்கர், பொண்டிங் போன்ற வீரர்கள் முன் வரிசையிலும் மார்டின், மார்க் வோ, ஸ்டீவ் வோ, லீமன், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் மத்திய வரிசையிலும் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்த மக்ரா மற்றும் வோனுடன் இணைந்து பிரெட்லீ மற்றும் கிலேப்சி விக்கெட்டுகளை அள்ள வெற்றிக்கனியை பறிப்பது அவுஸ்திரேலியாவிற்கு சாதாரண விடயமாக இருந்தது. 1999 உலக கிண்ண வெற்றியிலிருந்து மக்ரா, வோர்ன், லாங்கர், மாட்டின் போன்ற முதல் தரமான வீரர்கள் ஓய்வுபெறும் வரை (2007 ஆசஸ் தொடரின் இறுதியில்) அவுஸ்திரேலியா விளையாடிய 94 டெஸ்ட் போட்டிகளில் 70 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு வெறும் 11 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்திருந்தது, இதுவொரு மாபெரும் சாதனை.
குறிப்பிட்ட காலப்பகுதியில் சொந்த நாட்டில் வைத்து 49 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் இந்தியாவுடன் மட்டும் தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தது. சொந்த நாட்டில் வைத்து எந்த அணிகளுடனும் டெஸ்ட் தொடரை இழக்காத அவுஸ்திரேலியாவுடன் இந்தியாவும், நியூசிலாந்தும் தலா ஒரு தடவை டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தன, ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மட்டுமே அவுஸ்திரேலியாவில் வைத்து ஓரளவேனும் தாக்கு பிடித்திருந்தது.
அவுஸ்திரேலியாவிற்கு வெளியே குறிப்பிட்ட காலப்பகுதியில் 45 போட்டிகளை விளையாடியுள்ள அவுஸ்திரேலியா 30 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் பெற்றிருந்தது. இந்தியா(3), இங்கிலாந்து(3), மேற்கிந்தியா(1), இலங்கை(1), தென்னாபிரிக்கா(1) அணிகள்தான் குறிப்பிட்ட ஒன்பது போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பெருமையடைந்த அணிகள். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அணிகளுடன் மட்டுமே தலா ஒரு தடவை தொடரை இழந்த அவுஸ்திரேலியா மிகுதி அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வெற்றி கொண்டிருந்தது, வேறெந்த தொடரும் சமநிலையில்கூட முடியவில்லை, இழந்த 3 தொடர்களுமே 1 போட்டியை எதிரணி அதிகமாக வென்றதாலே அவுஸ்திரேலியாவால் இழக்கப்பட்டிருந்தது.
இப்படி உச்ச ஸ்தாயியில் சென்று கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றிப் பயணம் 2007 க்கு பின்னர் இன்றுவரை ஆட்டங்காண்பதற்கு காரணமாக அமைந்தத முதற்காரணி பந்து வீச்சுத்தான். என்னதான் மாங்கு மாங்கென்று ஓட்டங்களை குவித்தாலும் எதிரணியின் 20 விக்கட்டுகளையும் வீழ்த்தாவிட்டால் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாது என்கின்ற நியதியில் அவுஸ்திரேலியாவின் விக்கட் கொள்ளைக் காரர்களான மக்ரா மற்றும் வோனினது ஓய்வும் பிரெட்லீயினது உபாதையும் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு வரிசையில் பாரிய தாக்கத்தை தற்போது ஏற்ப்படுத்தியுள்ளது.
மக்ரா, வோர்ன் இல்லாததன் எதிரொலியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான 'பேர்த்' ஆடுகளத்தில் இறுதி இனிங்க்சில் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களை ஸ்டெயினின் உதவியுடன் தென்னாபிரிக்கா துரத்தி வெற்றி வெற்றிபெற்றதையும்; சுழலுக்கு சாதகமான 'மொகாலி' ஆடுகளத்தில் இறுதி 2 விக்கட்டுகளை வைத்துகொண்டு 90 ஓட்டங்களை பெற்று இந்தியா வெற்றிபெற்றதையும் சொல்லலாம். அதேபோல மெல்பேர்ன் ஒருநாள் போட்டியில் மலிங்க அரைச்சதம் அடித்து இலங்கை 1 விக்கட்டால் அவுஸ்திரேலியாவை வென்றதையும் எடுத்து காட்டலாம்.
மக்ரா, லீ, கிலெப்சிக்கு பதில் ஜோன்சன், ஹரிஸ், போலிங்கர், ஸ்டுவட் கிளாக், ஹெல்பன்ஹவுஸ், சிட்டில் என பலர் மாற்றீடாக வந்தாலும் யாராலும் முன்னவர்களுக்கு நிகராக பந்துவீச இயலவில்லை. இனிவரும் காலங்களில் வரும் பந்து வீச்சாளர்களும் மக்ரா, லீ போல் பந்துவீச சந்தர்ப்பம் மிகமிக குறைவாகவே இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. T/20 மற்றும் நவீன 'இரு இனிங்க்ஸ் ஒருநாள் போட்டி' என்பவற்றில் லைன் & லெந், ஸ்விங் கன்ரோல் என்பவற்றிலும் பார்க்க ஓட்டங்களை குவிப்பதை கட்டுயப்படுத்தும் சமயோகித பந்துவீசும் திறன்தான் தேவைப்படுகிறது, இதனால் பந்து வீச்சாளர்களது கவனம் இப்போது ஓட்டங்களை கட்டுப்படுத்துவதிலேயே(வேரியேஷனிலேயே) இருக்கின்றது.
லைன் & லெந், ஸ்விங் கன்ரோல் என்பவற்றிலும் பார்க்க குறிப்பிட்ட போட்டிகளின் தன்மைக்கேற்ப 'வேரியேஷனுக்கே' பந்து வீச்சாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் டெஸ்ட் போட்டிகளில் என்று வரும்போது லைன் & லேண்ட், ஸ்விங் கன்ரோல் போன்ற டெஸ்ட் போட்டிகளுக்கு தேவயான முக்கிய அம்சங்களை கையாள்வது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இனிவரும்காலங்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்ப்படப்போகும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பஞ்சத்தின் ஆரம்பம்தான் இது; இதற்க்கு சரியான முறையில் தீர்வு காணாவிடில் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான வேகப்பந்துவீச்சு மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்தும் இதேபோல ஓட்டகுவிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பந்து வீச்சாளர்களுக்கு வேலை கொடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கட்டுகளையும் கைப்பற்றுவது முன்னர்போல சாத்தியமான விடயமாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைக்காவிட்டால் அதிகமான டெஸ்ட் போட்டிகளை சமநிலையில் முடிக்கும் நிலையில்தான் இன்றைய எந்த டெஸ்ட் அணியும் உள்ளது, ஆஸ்திரேலியாவும் அதற்க்கு விதி விலக்கல்ல. ஆஸ்திரேலியாவிற்கு பந்துவீச்சு 2007 க்கு முன்னிருந்ததைவிட இப்போது வீழ்ச்சி அடைந்திருப்பது எப்படி பெரிய இழப்போ; அதேபோல இன்றைய அனைத்து அணிகளினதும் பந்துவீச்சு வரிசை வீழ்ச்சி அடைந்திருப்பது டெஸ்ட் கிரிக்கட்டை பொறுத்தவரை கவலையான விடயமே.
சுழல் பந்து வீச்சாளர்களுக்கு அவுஸ்திரேலியா படும் பாட்டை பார்க்கும்போது ஷேன் வோர்ன் இருந்த அணிக்கு இப்படி ஒரு நிலையா! என பரிதாபமாகதான் பார்க்க வேண்டி உள்ளது. வோனுக்கு மாற்றீடு இல்லை என்பதே உண்மை, ஆனாலும் வோனை 25% ஆவது நிவர்த்திசெய்யும் பந்து வீச்சாளர்கள் இல்லாததது அவுஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சு துறைக்கு பேரடி. இன்றைய தேதியில் உலகின் மோசமான சுழல் பந்துவீச்சு வளமுள்ள அணியாக அவுஸ்திரேலியா உள்ளமை டெஸ்ட் போட்டிகளில் அவர்களது வெற்றிவாய்ப்பை மேலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இன்றைய துடுப்பாட்டத்தை பொறுத்தவரை 2007 க்கு முன்னர் இருந்த வீரர்கள் அளவிற்கு இன்று உள்ளவர்களால் பிரகாசிக்க முடியவில்லை!! எப்போதுமே அவுஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு இப்போதுள்ளது போல் பஞ்சம் ஏற்ப்பட்டதில்லை; ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பஞ்சம் எதனால் ஏற்ப்பட்டிருக்கு மென்று மீண்டும் கூறவேண்டிய அவசியமில்லை, அதே T/20 மற்றும் புதியவகை ஒருநாள் போட்டியின் பிரபலம்தான் காரணம் என்பது வெளிப்படை உண்மை.
மைக்கல் கிளாக்கிற்கு பின்னர் ஒரு சிறந்த டெஸ்ட் அறிமுகம் அவுஸ்திரேலியாவிற்கு அமையாதது பொண்டிங்கின் ஓய்வின் பின்னர் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையை மிகவும் பாதிக்கும் நிலையை நிச்சயம் உருவாக்கும். 1999 -2007 வரை 7 துடுப்பாட்ட வீரர்களும் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரர்களாக இருந்த அவுஸ்திரேலியாவின் இன்றைய துடுப்பாட்ட வரிசையில் கிளாக், ஹசி, பொண்டிங் தவிர்த்து மிகுதி அனிவருமே நிச்சயம் அற்ற துடுப்பாட்ட வீரர்கள்தான் என்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை கவலையான விடயமே; மைக்கல் கிளாக்கிற்கு பின்னர் இதுவரை பல புது முகங்கள் மாறிமாறி வந்தாலும் அவர்களில் யாருமே திருப்தியாக இல்லை என்பதே உண்மை.
இன்று துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அன்று இருந்ததைப்போல (1999 - 2007) நிச்சயமாக வீழ்த்தப் படமுடியாத அணியல்ல; அதே நரம் ஒரு நாள் போட்டிகளில் உள்ளதைபோல ஏனைய முன்னணி அணிகளுக்கு சமபலமான அணி என்றும் சொல்ல முடியாது. காரணம் இவர்களது பந்துவீச்சு, துடுப்பாட்ட வளத்தை கொண்டு ஆசிய ஆடுகளங்களில் இனிவரும் காலங்களில் (புதிய திறமையான வீரர்கள் வரும்வரை) போட்டியை சமநிலை படுத்தவே போராட வேண்டியிருக்கும்.
அதேபோல் அவுஸ்திரேலியாவிற்கும், ஆசியாவிற்கும் வெளியே ஏனைய நாடுகளில் விளையாடும்போது போட்டிகளில் வெல்வதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். வெற்றி வாய்ப்புக்கள் அந்தந்த நேரத்து எதிரணியின் பலத்தை பொறுத்து அமையும்; கிடைக்கும் வெற்றிகளை முன்னர்போல அவுஸ்திரேலியர்கள் தாங்களாக ஒருதலை பட்சமாக இலகுவாக எடுத்துகொள்ள முடியாது. அதேநேரம் சொந்த நாட்டில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள் ஆயினும் முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் டெஸ்ட் வெற்றிகள் கணிசமான அளவு குறைவாகவே இருக்கும்.
இப்போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்திரம் குறைவடைந்து வரும் நிலையில் மீண்டும் விஸ்வரூபமெடுத்து 1999 - 2007 வரையிருந்த அணி போன்ற அணி உருவாகுவது சாத்திய குறைவு என்றாலும்; ஸ்திரமான டெஸ்ட் அணியொன்றை கட்டியெழுப்ப அவுஸ்திரேலியா சில/பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்படலாம்!! அதிலும் பொண்டிங், ஹசி போன்ற வீரர்களின் ஓய்வின் பின்னர் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை எப்படி இருக்குமென்று கற்பனை பண்ணினால் ஒட்டு மொத்தமாக சூனியமாகத்தான் தெரிகிறது.
டெஸ்ட் வெற்றிகளை இலகுவாக தன் கணக்கில் சேர்த்த அவுஸ்திரேலியா இனி வரம் காலங்களில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் கடுமையாக போராட வேண்டி இருக்கும்!!!!!
T/20 போட்டிகள்
இந்த மல்யுத்த போட்டிகளை பற்றி நிலையாக எதுவும் கூற முடியாது, இரண்டு ஓவர்களில் மொத்த போட்டியுமே மாறலாம் என்பதால் குறிப்பிட்ட எந்த அணியுமே தொடர்ந்து ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது. முதல்தர T/20 போட்டிகளுக்கு அவுஸ்திரேலியாவில் மிக அதிக வரவேற்பு இருப்பதால் அவுஸ்திரேலியா T/20 போட்டிகளில் எப்போதும் அனைத்து அணிகளுக்கும் சவாலான அணியாகவே இருக்கும் என்று சொல்லலாம்.
T/20 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் எப்போதும் அவுஸ்திரேலியா சவாலாகத்தான் இருக்கும்!!!
நன்றி.
கோம்பாக் கப் ரவுண்ட் அப்


முரளிக்கேவா
ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா, சனத்தை ட்ரொப் பண்ணி வாஸை ட்ரொப் பண்ணி,இப்ப முரளியுமா? என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு(!?) வழங்கியது வரை.

முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான ?!! களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது.

இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

கப்டன் ஹோட்
நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சு?டக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட கோவிச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க .

மசாலா இல்லா மகேல
மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான்.

சங்கிலி மன்னர்கள்
அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இள ரத்தங்கள்
மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று !!!
குறிப்பு
இந்த பதிவினை இட நான்கு நாட்கள் முயற்சி செய்தாலும்,வேலைப் பளு காரணமாக முடியவில்லை.சாம்பியன்ஸ் கிண்ணம் தொடங்க இரு நாட்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இப்பதிவு வருவதாக உணர்கிறேன்.
இதுக்கு பெயர்தான் கிரிக்கெட்

யார் எதிர்பார்த்தார்கள் இந்தியா தோர்க்கப்போகுத்தென்று 19 பந்தில் 21 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நேரத்தில் இரண்டு power play over கள் மீதமுள்ள நிலையில் சச்சினும் ஜடேஜாவும் களத்தில் இருக்கும்போது இப்படி மளமளவென்று விக்கட்டுகள் போகுமென்று,இதுதான் கிரிக்கெட்.

கையுக்குள் இருந்த match கைவிட்டுபோனது இந்திய ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பினும் இந்தப் போட்டி பார்வையாளர்களை கதிரையின் விளிம்புக்கே கொண்டு சென்றது.காலையில் பங்களாதேஷ் 1 விக்கெட்டால் வென்றதுபோல் இந்தியாவும் வெல்லப்போகிறது என்று அருகிலிருந்த நண்பர் கூறிக்கொண்டிருக்க மோசமான run selection ஆல் மீண்டும் ஏமாற்றியது இந்தியா. 3 போட்டியிகளில் தோற்றாலும் மூன்றையும் போராடியே தோற்றது இந்தியா.இன்னமும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் நாணயசுழர்ச்சியில் வெல்லும் அணிக்கே சாதகமான வாய்ப்பு அதிகமுள்ளநிலையில் இந்தியா மூன்று துறைகளிலும் சிறப்பாக ஆடினால் மாத்திரமே தொடரை கைப்பற்ற முடயும்.

ஒருநாள் போட்டிகளில் 17000 ஓட்டங்களை கடந்துள்ள சச்சின் இதுவரை மொத்தமாக அனைத்து சர்வதேசப்போட்டிகளிலும் சேர்த்து 595 போட்டிகளில் 686 இன்னிங்க்ஸ்களில் 48.25 சராசரியுடன் 29921 ஓட்டங்களை 87 சத்தங்கள் 144 அரைச்சதங்களுடன் பெற்றுள்ளார் 30000 ஓட்டங்களுக்கு இன்னமும் 79 ஓட்டங்கள் மட்டுமே தேவை.அது தவிர 234 catch உம் 199 விக்கட்டுகளையும் வீழ்த்திஉள்ளார். இன்னமும் 1 விக்கட்டை வீழ்த்தினால் 200 விக்கட்டுகள் சச்சினுக்கு கிடைக்கும். கிரிக்கெட் வரலாற்றில் யாரும் முறியடிக்கமுடியாத சாதனை இது. ஆனால் சச்சின் ஒருபோட்டியில் பெறப்படும் எந்த சாதனையையும் இதுவரை பெறாதது ஆச்சரியமான உண்மை. டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் பெறப்படும் சாதனைகளான அதிகபட்ச ஓட்டம், விரைவான சதம், விரைவான அரைச்சதம் , இணைப்பாட்டம் , ஒரு ஓவரில் பெறப்பட்ட (ஓட்டங்கள் , பவுண்டரிகள், சிக்சர்கள்) என்று எதிலும் சச்சின் சாதிக்கவில்லை. அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று ஒருநாள் தொடரின் அதிகபட்சக் ஓட்டமான சாயிட் அன்வரின் 194 ஓட்டத்தினை முறியடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் சச்சின் தவறவிட்டுவிட்டார்.
இத்தனை சாதனைகளைச்செய்த சச்சின் ஒரு போட்டியில் வரும் சாதனைகளையும் முறியடிக்கின்றாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த வீரர் யார்?
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு வீரர்கள் வரலாற்றின் தலை சிறந்த வீரராகளாக இருப்பார்கள் உதாரணமாக புட்போல் - பீலே , டெனிஷ் - ரோஜர் பெடரர் , கொல்ப் - டைகர் வூட்ஸ் , போர்முலா வண் - மைக்கல் சூமேக்கர் , மொர்டோ ஜி.பி - வாலன்சீனோ ரொசி, அப்படி என்றால் கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரர் யார்?

மற்ற விளையாடுகளை போலல்லாது கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங்,பௌலிங் என்று இரண்டு வகையான பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அந்தவகையில் பௌலிங்கை முதலில் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கட்டை பொறுத்தவரை முரளியும்,ஷேன்வானும் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் இருவருமே சிறந்த வீரர்கள்தான்.

முரளி
முரளியை பொறுத்தவரை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் அதிகமானவை ஸ்பினெர்ஸுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களிலேயே பெறப்பட்டவை. மற்றும் பங்களாதேஷ் சிம்பாவேயுடன் 150 இக்கும் அதிகமான விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார் (வோன் 50 க்கும் குறைவான விக்கட்டுகள் ) மற்றும் ஷேன்வார்னை பொறுத்தவரை மக்ராத் பிரட்லீ கிலேப்சி ஆகியோர் விக்கட்டுகள் அள்ளிய பிறகே பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கும்க் முரளிக்கு வாஸ் தவிர வேறு சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதும் சாதகமானதே. 

ஷேன் வோர்ன்
அதேபோல் வார்னும் ஸ்பினெர்ஸுக்கு சிறப்பாக ஆடும் இந்திய பாகிஸ்தானுடன் முரளியைவிட குறைவான விக்கெட்டுகளையே பெற்றுள்ளார் .மற்றும் ஸ்பினெர்ஸுக்கு ஆடவராத தென்அபிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து அகியநாடுகளுடன் அதிகமான போட்டிகளில் ஆடி அதிகமான விக்கட்டுகளை பெற்றுள்ளார் .
ஆக இருவரும் வேறுபட்ட சம திறன் படைத்தவர்களே.

வாசீம் அகரம்
எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளி, வோர்ன் இருந்தார்களோ அதைப்போலவே ஒருநாள் ஆட்டங்களில் முரளி , வாசிம் அகரம். இருவரும் சிறந்த வீரர்களே .எக்கானமி , அவரேஜ் , விக்கட் என அனைத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.முரளி எப்படி தூஸ்ராவில் புலியோ வாசிம் அகரம் ரிவர்ஸுவிங்கில் புலி.
ஆனால் மொத்தமாக பௌலிங் என்று பர்க்கப்போனால் டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் உச்ச ஆதிக்கம் செலுத்துவது முரளி மட்டுமே. ஆக கிரிக்கெட்டின் தலை சிறந்த பந்துவீச்சாளர் முரளிதான் என்பதில் சந்தேகமில்லை

லாரா
பேட்டிங் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரட்மன் ஒப்பீட்டுக்கப்பாபற்ட்ட பற்ஸ்மனாக இருப்பதால் அடுத்தநிலையில் சச்சின், லாரா, பாண்டிங் மூவருக்குமிடையே போட்டி உள்ளது. லாரா தலைசிறந்த பற்ஸ்மன் இதில் மாற்றுக்கருத்து இல்லை அனால் சென் ஜோன்சில் அடித்த 400 ரன்ஸ் தவிர லாராவின் கரியர் மற்ற இருவருடன் பார்க்கும்போது குறைவாகவே உள்ளது .மீதி இருவரில் சச்சின் முன்னணியில் இருந்தாலும் தற்போதைய போம்,வயது,அவரேஜ் என்பவற்றை பார்க்கும் போது பாண்டிங் நிச்சயம் சச்சினுக்கு போட்டிக்கு நிற்பார்.
சனத்
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை சச்சின் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார் விவ்வியன் ரிச்செட்ஸ் , சனத், லாரா ,அன்வர், கங்குலி , பாண்டிங் என காலத்துக்கு காலம் பலர் சச்சினுக்கு போட்டியாக இருந்திருப்பினும் யாரும் சச்சினை நெருங்க முடியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் சச்சின் என்பதில் மாற்றுகருத்தில்லை.

கலிஸ்
சகலதுறைவீரர்களென்று பார்த்தால் ஒரு நாள் போட்டிகளில் சனத்தும் கலிசும் சிறப்பான தகமைகளை கொண்டிருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் கலிசளவிற்கு சனத்தின் பெறுபேறுகள் இல்லை. ஜாக் கலிஸ் 20 ,௦௦௦௦௦௦ ௦௦௦000 ரன்ஸ் மற்றும் 500 விக்கட்டுகளை இரண்டு வகையான போட்டிகளிலும் சேர்த்து பெற்றுள்ளார் உண்மையிலேயே கலிஸ் தான் பெஸ்ட் கிரிக்கெட்டர். ஆனால் அனைவரது பார்வையிலும் ஒரு பற்ஸ்மன் அல்லது ஒரு பௌலர் தான் பெரிதாக கணிக்கப்படுகின்றார். ஒரு ஆல் ரௌண்டர் பெரிதாக தெரிவதில்லை . இது தான் உண்மை
இங்கு நாம் ப்லேயர்சின் கரியர் அடிப்படையிலேயே தான் வீரர்களை கணித்துள்ளோம் சிறந்த வீரர்களுக்கு நல்ல கரியர் இல்லாதிருப்பதும் உண்டு உதாரணமாக அரவிந்த டி சில்வா , நதன் அஸ்ரில்,டேமியன் மார்ட்டின் என சொல்லிக்கொண்டே போகலாம்.

பொண்டிங்
யார் பெஸ்ட் பற்ஸ்மன் என்று பார்ப்போமானால் கிரிக்கெட்டில் பல சிறந்த பற்ஸ்மன்கள் இருந்தாலும் ஒருநாள் டெஸ்ட் என இரு துறையிலும் உச்ச திறனை வெளிப்படுத்திய, வெளிப்படுத்திகொண்டிருக்கும் சச்சினே வரலாற்றின் தலை சிறந்த பற்ஸ்மன் என்றால் மிகையாகாது. இதனை ஒவ்வொரு வீரர்களுக்கும் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து அவர்களது கரியர் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

சரி இப்ப சச்சினா முரளியா கிரிக்கெட்டின் தலைசிறந்தவீரர் என்று பார்த்தால் இருவருமே தத்தமது துறையில் உச்சத்தில் உள்ள வீரர்கள். ஒருவர் பௌலர் மற்றயவர் பற்ஸ்மன் இரண்டுமே கிரிக்கெட்டின் இரு கண்கள் என்னசெய்வது முதலில் பொவ்ல்ர்ஸுக்கா பற்ஸ்மனுக்கா கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம் என்று பார்ப்போம்.
ஒரு பௌலருக்கு கடைசியாக வரும் 4 பற்ஸ்மனது விக்கட்டும் ஓவரு இனிங்சிலும் வீழ்த்த சந்தர்ப்பம் வரும் ஆனால் பற்ஸ்மனுக்கு எதிரணியிலுள்ள 4 சிறந்த பந்து வீச்சாளர்களை அதிகமாக் சந்திக்க வேண்டியிருக்கும்.
பற்ஸ்மன் ஒரு பந்து தவறு செய்துவிட்டால் கதைசரி, ஆனால் பௌலேர்ஸ் எத்தனை தவறுவிட்டாலும் ஒரு நல்ல பந்தில் விக்கட் வரும், ஏன் பல சமயம் தவறான பந்துகளுக்கும் விக்கட் வருவதுண்டு.
அண்ட பிரசர் ஒரு பற்ஸ்மன் கண்டபாட்டுக்கு அடிச்சாதான் ஒரு பௌலருக்கு வரும் ஆனால் பற்ஸ்மனுக்கு மற்றபக்கம் நிக்கிற பற்ஸ்மன் அவுட் ஆனாலே அண்ட பிரசர் அதிகமாகும்.
பௌலருக்கு 10 வீரர்களும் அணித்தலைவரும் களத்தில் துணையாக இருப்பர். பற்ஸ்மன் ஒரே ஒரு நொன் ஸ்ரைக்கருடன் மட்டுமே களத்தில் நிற்கவேண்டும்.
ஒரு பௌலர் பந்துவீசும்போது எந்த தடையுமில்லை அனால் பற்ஸ்மன் ஓவரு ரன்சும் 10 வீரர்களை தாண்டித்தான் பெறவேண்டும்.

சச்சின்
ஆகமொத்ததில் ஒரு பற்ஸ்மனுக்கே பௌலரை விட சவால்கள் அதிகம் என்பது தெளிவாக தெரிகிறது. மற்றும் போலிங்க்கை விட பற்டிங்கையே மக்களும் அதிகளவில் விரும்பி பார்க்கின்றனர்.ஐந்து விக்கட்டுக்கு ஒரு செஞ்சுரி சமம் என்று கூறினாலும் ஒரு செஞ்சுரிக்கு இருக்கும் மதிப்பு ஐந்து விக்கெட் எடுக்கும் பௌலருக்கு இருப்பதில்லை,இது தான் உண்மை.எனவேதான் முரளி தலைசிறந்த வீரராக இருப்பினும் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் சச்சினே கிரிக்கெட்டின் வரலாற்றின் தலை சிறந்த வீ்ரர் என்பது எமது கருத்து.
சத்தியமா நான் ஒரு இந்திய, சச்சின் ரசிகன் அல்ல,இது அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
"சனத் விலகிக்கிங்க" ஒரு ரசிகனின் அன்புமடல்

அன்புடன் சனத்திற்கு...
எமக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து உங்க அளவுக்கு யாரையும் ரசிச்சதில்ல கிரிக்கெட் என்ற சொல் காதில் விழுந்தால் மனதில் பதியும் உருவம் நீங்கள் சனத்.அடுத்தவாரம் வரும் match க்கு முதல்வாரமே தயரகிவிடுவோம், அது ஒரு காலம் ! எல்லா நண்பர்களும் ஒன்றாக சேர்ந்தது ஒரே இடத்தில் tost போடுவதற்கு ஒரு மணி முன்னரே match பார்ப்பதற்கு தயாராகிவிடுவோம். உங்க wicket போனால் மயானஅமைதி போல இருக்கும் வீடு , அரை மணி நேரம் யாரும் யாருடனும் பேசமாட்டோம், பேயறைந்தது போலிருப்போம் அப்படி ஒரு விரக்தி எங்களுக்குள் இருக்கும்.படுத்தால்,சாப்பிட்டால் என சதா சனத் , ஸ்ரீலங்கா என்று திரிந்த காலங்கள் அவை.தற்போதும் match பார்ப்பது குறயாவிட்டாலும் சில பல காரணங்களுக்காக அந்தவெறித்தனம் குறைந்துவிட்டது.ஆனால் சனத் என்னும் சொல்லின் ஈர்ப்பு கடைசி வரை எம்மை விட்டு அகலாது.

சனத் உங்களை மாதிரி ஒரு cricketer இனிமேல் சிறீலங்காவில் மட்டுமல்ல உலகத்திலேயே வரமாட்டான். 13000 runs 90 strike-rate இல் இனிமேல் எவன் அடிப்ப்பான்? அல்லது 13000 runs 320 wicket 100 catch தான் யாருக்கு வரும்.சனத் நீங்கள்தான் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றின் "best cricketer" என்பதை சவால் விட்டு கூறுவேன். ஓருவேளை நீங்கள் முதல் 100 match உம் ஏழாம் இலக்கத்திற்கு குறைவாக இறங்கி ஆடாமல் ஆரம்ப வீரராக ஆடியிருந்தால் யார்ர்கண்டது 18000 runs உடன் சச்சினின் one day batting record இலும் பார்க்க சிறந்த record உடன் வரலாற்றின் சிறந்த one day player ஆகக்கூட இருந்திருக்கலாம்.

இப்ப உங்களுக்கு வயசு நாற்பது , உங்க உடம்பு ஒத்துழைச்சாலும் மனம் முன்னர் போல திடகாத்திடமாக இல்லை.அதற்க்கு பல காரணங்கள் (சங்ககார , மகேல , சில பல தெரிவாளர்கள் ) நீங்கள் உங்களுடன் களமிறங்கும் சக ஆரம்பவீரர்களை விட அதிகம் ஆதிக்கம் செலுத்துபவர், ஆனால் சமீபகாலமாகவே நீங்கள் ஒருபுறம் நிற்க டில்ஷான் மறுபுறம் வேகமாக ஓட்டங்களை குவிப்பதுவும் அண்மைக்காலங்களில் உங்கள் wicket ஐ நீங்கள் பறிகொடுப்பதற்கு வழிகோலுகிறது.முக்கியமாக ஒவ்வொரு batsman க்கும் இருக்கும் அதிஷ்டம் உங்களை அண்மைக்காலமாக எட்டிக்கூடப்பார்ப்பதில்லை.

2005 ஆம் ஆண்டு நீங்கள் கட்டாயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென்று தெரிவாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள் . அதே தெரிவாளர்கள் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்காக உங்களை மீண்டும் அழைத்தார்கள், அந்த போட்டித்தொடரின் one day series 5- 0 என இலங்கையால் வெல்லப்பட்டபோது , நீங்கள்தான் தொடர் நாயகன் (man of the series) . (இங்கிலாந்தில் உங்களை யாரும் விமானநிலையத்தில் வரவேற்கவராதது மறக்கமுடியாதது ).அங்கும் நீங்கள்தான் தேவைப்பட்டீர்கள். மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டவேளை ஜனாதிபதியின் சிபாரிசில் 2007 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தது .அந்த தொடரில் 450 ஓட்டங்களை குவித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை சென்ற அணிக்கு பக்கபலமாக இருந்தீர்கள். அதன்பின்னர் சிலதடவை rest என்ற பெயரில் நீங்கள் நிப்பாட்டப்பட்டாலும் நேரடியாக drop பண்ணப்படவில்லை.

ஆனால் இப்போது தெளிவாகத்தெரிகிறது உங்களுக்கு வலைவீசிவிட்டர்கள் என்று. உங்களை middle order இக்கு மாற்றியது ஏன்என்று எமக்கு நன்றாகத்தெரியும் . ஒரேயடியாகத்தூக்கினால் வரும் சர்ச்சையை தவிப்பதர்க்ககவே இந்த காய்நகர்வு .இதுவரை நீங்கள் middle order இல் பலதடவை விளையாட முயற்சித்தபோதும் நன்றாக விளையாடியதில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் runs அடிக்கவேண்டிய சுழ்நிலை. இருப்பினும் இது உங்களுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை. runs அடித்தால் தொடர்ந்தும் middle order , இல்லையேல் ஒரேயடியாக ஆப்பு.

சனத் நீங்கள் புதுப்பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விரட்டிவிரட்டி அடித்தவர்.களத்தில் நுழைந்தவுடன் பழையபந்தில் சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எவளவு கடினம் என்று எமக்குத்தெரியும்.ஆனால் உங்களால் முடயும், பல டெஸ்ட் innings களில் நீங்கள் middle order இல் சாதித்துள்ளீர்கள்.இந்த ஒருதொடரில் மட்டும் முளுக்கவனத்துடன் நிதானமாக நன்றாக ஆடுங்கள்.தொடர் முடிந்ததும் உடனடியாக முகத்திலடித்தமாதிரி உங்கள் ஓய்வை அறிவித்துவிடுங்கள்.

10 வருடங்களுக்கு முன்பே சனத் இல்லாத இலங்கைஅணியை கற்பனைகூட செய்யமுடியவில்லை. சனத் ஒய்வு பெற்றால் நாம் எப்படி match பார்ப்பது என்று மோட்டுத்தனமாக யோசித்த காலங்கள் அவை. எங்கள் அளவிற்கு வேறு யாரும் உங்களுக்கு supporters இருக்கமாட்டர்கள் என்ற எண்ணமும் எங்களிடம் அதிகமாகவே இருந்தது.கொழும்பு சென்றால் சனத்துடன் புகைப்படம் எடுப்பது எம்மில் பலருக்கு கனவாக இருந்தது , சிலருக்கு நிறைவுமேறியது.இன்று நாங்களே சொல்கிறோம் போய்விடுங்கள் சனத், இல்லாவிட்டால் உங்களுக்கும் அரவிந்த,அர்ஜுன, இஜாஸ்,இன்சமாம்,கங்குலி,டிராவிட், என ஆசிய அணிகளின் வீரர்களுக்கு நடந்ததுதான் நடக்கும்.

நீங்கள் cooling glass அணிந்தோ அல்லது முகத்திற்கு பூச்சுக்கள் பூசியோ நாம் பார்த்ததில்லை,
எதிரணி வீரரிடம் செய்கையாலோ வாய்ப்பேச்சாலோ மோதிப்பார்த்ததில்லை,
நீங்கள் வேங்கை சனத்,
உங்களிடம் அடிவாங்கி படம் நடிக்க போன பந்துவீச்சாளரும் உண்டு,
உங்க cut short உம் flick short உம் இனிமேல் எங்களால் பார்க்கமுடியாதுதான், என்ன செய்வது எல்லாவற்றுக்கும் முடிவென்று ஒன்று உள்ளதல்லவா.
ஆனால் ஒன்று சனத் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அதேபோல் நீங்கள் இல்லாத இலங்கை அணி சூனியமானது.அந்த சூனியத்தை ரசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. உங்களை நாங்கள் அடிக்கடி பார்க்கணும் முடிஞ்சா வர்னணையாளராக வந்து சந்தோசப்படுத்துங்க.நீங்க உங்க குடும்பத்தோட சேர்ந்து மீதிக்காலங்களில் பூரண உடல்நலத்துடனும் பூரண ஆயுளுடனும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
இப்படிக்கு
என்றும் உங்கள் உண்மையான ரசிகன்மீண்டும் வசீம் அகரம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தாலும் இறுதிவரை போராடிய அமீர், அஜ்மல் ஜோடி நியூசிலாந்தின் வயிற்றில் கடைசிவரை புளியைக்கரைத்தது என்றே சொல்லலாம் 212 என்னும் எட்டக்கூடிய இலக்கை நோக்கி ஆடத்துவங்கிய பாகிஸ்தான் 50 ஓட்டங்களை 10 ஓவர்களில் ஒருவிக்கடை மாத்திரம் இழந்து பெற்றிருந்தது.சல்மான் பட்டின் ரன் அவுட்டினைத்தொடர்ந்து மளமளவென சரிந்த விக்கட்டுகள் 101 ஓட்டங்களுக்கு 9 என்னும் நிலையில் இருந்தபொது ஜோடி சேர்ந்த அமீரும் அஜ்மலும் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்படுமட்டும் சிறப்பாக ஆடிவந்தது.
அனால் கடைசி 3 ஓவர்களில் எந்த பவுண்டரிகளும் கிடைக்காததால் ஒவ்வொரு ஓட்டங்களாகவே இருவரும் சேகரித்தனர்.ஆனால் இறுதி ஓவரில் எப்படியும் ஒருநான்கு ஓட்டமாவது தேவைப்பட்ட நிலையில் ஒராம் வீசிய just short பந்தினை hugg செய்து fine leg திசையில் நின்ற மில்சிடம் பிடிகொடுத்து அஜ்மல் ஆட்டமிழந்தபோது அபுதாபி மைதானமே நிசப்தத்தில் மூழ்கியது. வெறும் ஏழு ஓட்டங்களால் வெற்றியையும் 3 ஓட்டங்களால் 10 ஆவது விக்கட்டின் இணைப்பாட்ட சாதனையையும் இருவரும் தவறவிட்டனர். (முன்னைய சாதனையாக 106 ஓட்டங்களை விவ்வியன் ரிச்சட்சும் மைக்கல் ஹோல்டிங்கும் இங்கிலாந்துக்கு எதிராக 1984 ஆம் ஆண்டு பெற்றிருந்தனர் )
போட்டி தோல்வியடைந்தாலும் அக்ரமின் காலத்து போராடும் பாகிஸ்தானை நீண்டகாலத்திற்கு பின்னர் காணக்கூடியதாக இருந்தது. முகமது அமீர் குறிப்பாக மீண்டும் வசீம் அகரம் எங்கே பாகிஸ்தான் அணியில் வந்து விட்டாரோ என்று சொல்லுமளவிற்கு பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஜொலித்ததை காணக்கூடியதாக இருந்தது. swing control , revers swing , joker , slow ball என அனைத்திலும் ஆரம்பகால வசீம் அக்ரமை இவர் ஞாபகப்படுத்துகிறார்.
அதே போல் 18 வயதுமட்டுமே நிரம்பிய உமர் அகமல் பாகிஸ்தானுக்கு கிடைத்த வரம். உயரம் குறைவாக இருந்தாலும் இவர் நேர்த்தியாக அடிக்கும் sixer கள் ஒவ்வொன்றும் big six களாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவர் book shot எனப்படும் கிரிக்கெட்டுக்கேஉரிய shot களையும் சிறப்பாகவே விளையாடும் ஒருதிறமைசாலி.
ஆனால் பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்களாலும், அணித்தலைவர்களாலும் இப்படி சிறந்தவீரர்களது கிரிக்கெட்வாழ்க்கை வீணடிக்கப்பட்டது வரலாறு . வக்கார் யூனிஸ், சொகைப் அக்தர், முகமது அஸிவ், யூஸப் யுகானா, அசார் முஹமட், அப்துல் ரசாக்,சக்லையின் முஸ்ராக் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் . யூனிஸ் ஹானும் பல தவறான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வருவதால் தற்போதுள்ள இளம்திறமைகளும் வீணடிக்கப்படலாம், சிறப்பாக ஆரம்பத்துடுப்பாட்டவீரராக விளையாடிய கமரன் அக்மல் ஏன் midle order க்கு மாற்றப்பட்டார் என்றே தெரியவில்லை.யுகானா இரண்டு ஆட்டங்களுக்கு ஒருதடவை நிறுத்தப்படுகிறார், சுழற்ச்சிமுறையில் யுகானா,மலிக், மிஸ்பா உல் ஹாக் நிறுத்தப்படுகின்றனர்.
இப்போது பாகிஸ்தானுக்கு தேவை ஒரு ஸ்திரமான தலைத்துவம். அப்ரிடி மட்டுமே அதற்க்குத்தகுதியானவர்.அப்ரிடி captain ஆகும்பட்சத்தில் இவற்றுக்கானதீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது.இன்சமாம் சொன்னதுபோல் அப்ரிடியும் தனது ஆட்டத்தை பொறுப்பாக ஆடுவார், மற்றும் தலைமைத்துவத்துக்கான அறிகுறிகள் இவரிடம் நிறையவே உண்டு.பார்ப்போம் அப்ரிடி தலைமையிலாவது மீண்டும்ஒரு போராடும் வசீம்காலத்து பாகிஸ்தான்அணியை பார்க்கலாமா என்று.யார் இந்த மஹேல ஜெயவர்த்தன?


மஹேல ஜெயவர்த்தன ,
இன்றைய உலகின் தலை சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவர்,இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த டெஸ்ட்வீரர்,ஐசிசி தர வரிசையில் முதல்தடவையாக முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகிலேயே அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரர் இவர்தான் என்ற போதும் தரப்படுத்தலின் ஏனைய காரணிகளால் மூன்றாம் நான்காம் இடங்களில் இருந்து வந்த மஹேல,முதல் முறையாக முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

கடந்த இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஒன்பதாயிரம் ஓட்டங்களை கடந்து பல சாதனைகளையும் மைல்கற்களையும் கண்ட மகேலவுக்கு சாதனைகள் ஒன்றும் புதிதல்ல.ஏனெனில் இவரது அறிமுகப்போட்டியே ஒரு உலக சாதனைப்போட்டி.டெஸ்ட் வரலாற்றின் ஒரு இன்னிங்க்சில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக இலங்கை தன்னைப் பதிவுசெய்த போட்டிதான் மகேலவின் அறிமுக போட்டி,ராமர்பாலம் கட்ட அணில் உதவியது போல 952 ஓட்டங்களில் மகேலவும் தனதுபங்காக 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.இவர் ஆடு களத்தில் முதல்முறை ஆடவந்த போது மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்தவர் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த.இப்படித் தான் ஆரம்பமானது இவரின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு .

மஹேல தனது முதல் சதத்தினை நான்காவது போட்டியிலேயே பதிவு செய்தார்.காலி மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களை குவிக்க முடியாத ஆடுகளத்தில்,நியுசிலந்துடன் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்து அழுத்தங்களுடன்(under pressure) ஆடிய இலங்கை அணியில் சனத்,அரவிந்த,ரணதுங்க போன்றோர் தடுமாறி வரிசையாக ஆட்டமிழக்க "இளங் கன்று பயமறியாது "என்பது போல அனாயசமாக ஆடி 167 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றிக்கு பாலம் அமைத்தார்.தனது ஏழாவது போட்டியிலேயே இந்தியாவுடன் இரட்டை சதமடித்து உலகினை தன்பக்கம் திரும்ப வைத்தார்,இது தான் மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்ற முதல்சதம். கும்ப்ளேயும்,ஹர்பஜனும் விக்கட்டுகளை மறுகரையால் சரிக்க,ஒருபுறம் மகேலவோ நிதானமும் அதிரடியும் கலந்து Bating விருந்து அளித்து கொண்டிருந்தார்.

இங்கு நான் கண்டிப்பாக எஸ்.எஸ்.சி க்கும் மகேலவுக்குமான ராசி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.எஸ்.எஸ்.சி தான் மஹேலவின் சொந்த மைதானம்.இவர் சிறு வயதிலிருந்து இந்தக்கழகத்திற்கே ஆடி வருவதால் இவருக்கு இந்த மைதானம் அத்துப்படி.என்னதான் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கோ,சுழலுக்கோ சாதகமாய் இருந்தாலும் இங்கே பந்து மஹேல சொல்தான் கேட்கும்.எந்த புல்லில் பட்டால் பந்து எந்தவேகத்தில் செல்லும் என்றுகூட மகேலவுக்கு தெரியும் என இலங்கை வர்ணனையாளர் ஒருவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.இதற்கு இவர் இந்தமைதானத்தில் பெற்றிருக்கும் பெறுபேறுகள் சான்று.22 போட்டிகளில் 2467 ஓட்டங்கள்,அதில் ஒன்பது சதங்கள்.ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் எனும் சாதனைக்கு மஹேல சொந்தக்காரர்.டான் பிரட்மன் எம்.சி.ஜி யில் பெற்ற ஒன்பது சதங்களுக்கான சாதனையை மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்றிருக்கும் ஒன்பது சதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இச்சாதனையினை முறியடிக்க வந்த வாய்ப்புகளை நியுசிலந்துடன் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் தொன்னூறுகளில் ஆட்டமிழந்த்ததால் தவறவிட்ட மகேலவுக்கு இந்த சாதனையினை முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.இப்படியே இது தொடர்ந்தால்,மஹேல ஆடும்வரை எஸ்.எஸ்.சி யில் போட்டிகள் வேண்டாம் என்று உலகநாடுகள் அனைத்தும் ஐ.சி.சி க்கு மனு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உயர்வேகத்தில் மேலேசென்று கொண்டிருந்த மகேலவின் கிரிக்கெட் வாழ்க்கையில் தடைக் கல் போலத்தான் அமைந்தது அந்த 2003 உலக கிண்ணம்.ஒன்பது போட்டிகளில் வெறும் 21 ஓட்டங்களையே பெற்றார் மஹேல.இன்னமும் சிலர் இதனையே கூறி மகெலவை விமர்சனம் செய்து அற்பசந்தோசம் கண்டு கொள்கிறார்கள்.ஆனால் அதே உலககிண்ணத்தில் பாகிஸ்தான் வரலாற்றின் தலைசிறந்த வீரர் இன்சமாம் மகேலவை விட குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தார்.அதற்காக இன்சமாமும் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.அதிர்ஷ்டம் திறமயைத் தீண்டலாம்,ஆனால் திருடிவிடமுடியாது.அணியில் இருந்தே விலக்கப்பட்ட மஹேல இரண்டு வருடங்களின் பின் அணித்தலைவராய் பொறுப்பேற்று அணியை 2007 உலக கோப்பை இறுதியாட்டம் வரை கொண்டு சென்றது மட்டுமல்லாமல் எப்படி 2003 உலககோப்பையில் இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இருந்தாரோ அதேபோல் இம்முறை அதிகஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது அவரது திறமைக்கு ஒருசான்று.

cover drive,on drive.leg glance,pullshot,hookshot,squarecut,improviseshot களான latecut,paddlesweep,inside out என அனைத்து shot களையும் துல்லியமாக ஆட கூடிய ஒரு சில வீரர்களில் மகேலவும் ஒருவர்.ஒரு முழுமையான இன்னிங்க்ஸ் மகேல ஆடினால் அதனை ஒரு பாடமாக சொல்லகூடியது போல் இருக்கும்.டெஸ்ட் போட்டிகளில் அந்தந்த பந்துகளுக்கு ஏற்றாட்போல ஆடும் மகேல ஒருநாள் போட்டிகளில் அதனை சரியாக கையாளாதது அவரின் திறமைக்கு குறைவான ஒருநாள் பெறு பேற்றுக்கு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.இன்னிங்க்ஸ் ஆரம்பத்திலேயே cover drive போன்ற shots தேர்வு செய்வது பல சமயம் இவரின் விக்கடை பறிகொடுக்க காரணமாக இருந்துள்ளது,மற்றும் 40 ஓவர்கள் வந்து விட்டால் ஒவ்வொரு பந்தும் அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆடுவதால் தனது விக்கட்டை தானே பல தடவை எதிரணியினருக்கு கொடுத்துள்ளார்( he throw his wicket).

சில சுயநல ஆட்டம் ஆடும் வீரர்கள்போல் 48,49 ovar வரை நிதானமாக ஆடியிருந்தால் இன்னும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருக்கும்,ஆனால் தனது சுபாவத்தை மாற்றமுடியாதுள்ளதாக மஹேல பலதடவை தானே குறிப்பிட்டுள்ளார். மகேல தன் திறமையினை விட குறைந்த ஓட்டங்களையே ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கும் போதும் அவர் சதம் அடித்த (11 தடவையும் ) அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிக்கனியை சுவைத்துள்ளது என்பதிலிருந்து அவர் சுயநல ஆட்டம் ஆடுவதில்லை என்பது கண்கூடு.

இவரின் திறமைகள் உச்சத்தைதொட்ட காலம் இவர் அணித்தலைவராய் பொறுப்பேற்ற பின்னர்தான்.இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்த இலங்கையினை மீட்டெடுத்து சமநிலைப்படுத்த தோள்கொடுத்தார்,பின்னர் ஒரு நாள் தொடரினை 5-௦0 என இலங்கை வென்ற போது மஹேல தொடர்ச்சியாக இரண்டு சதமடித்தார்.இவரது தலைமையின் கீழ் இலங்கை ஒருநாள் போட்டியிலும் (443),T௦/20௦ போட்டியிலும்(260) அதி கூடிய ஓட்டங்களை பெற்ற உலக சாதனையினை பதிவு செய்தது.இவரது தலைமையிலான இலங்கையணி மேற்கிந்தியதீவுகளில் வைத்து முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கைக்கு பெற்று தந்தது ,ஆசியகொப்பையை மீண்டும் தக்கவைத்துக்கொண்ட மகேல இங்கிலாந்து , நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என்பவற்றில் நடந்த தொடர்களில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்திருந்தார்.மற்றும் ஆசிய அணிக்கு தலைமை தாங்கி ஆபிரிக்க அணிக்கு எதிராக 3போட்டிகளிலும் வெற்றி பெற்று கொடுத்ததொடல்லாமல் அந்த தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவாகியது மகேலாவின் தலைமைத்துவத்தின் சிறப்பான தகமைக்கு இன்னுமொரு எடுத்துகாட்டு.

சொந்த மண்ணில் தென்ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் சாதனைகளுக்கான தொடராக மாறியது.தான்விளையாடிய முதல் போட்டியில் இலங்கை வீரர்ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக சனத் ஏற்படுத்திய சாதனையை முறியடித்து வலதுகை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களுக்கான(374) உலக சாதனையை நிலைநாட்டினார்.தனது நெருங்கிய நண்பரான சங்காவுடன் பெற்ற இணைப்பாட்டம் கிரிக்கெட் வரலாற்றின் எந்த ஒரு விக்கட்டுகுமான சாதனை இணைப்பாட்டம்.ஆனால் எனக்கு என்னமோ அந்த 374ஐ விட இரண்டாவது போட்டியில் மஹேல பெற்ற 123 ஓட்டங்கள் தான் அவரது தலைமை பொறுப்பின் இயல்பை காட்டியது.அந்த போட்டியில் 352 என்ற இலக்கை அடைந்தது இலங்கை அணியின் வெற்றிகரமான நான்காம் இன்னிங்சுக்கான சாதனை.(successfull runchase in the 4th innings)

யார் கண் பட்டதோ அதன் பின் ஒரு நாள் போட்டிகளில் மஹேல சோபிக்கவில்லை,2007 உலக கிண்ணத்தின் முன் வல்லுனர்கள் கணிப்புபடி மகேலவின் போம் இலங்கைக்கு பின்னடைவு என்று எதிர்வுகூறப்பட்டது.ஏனெனில் அதற்கு முன் மஹேல பதினேழு போட்டிகளாக அரை சதம் ஒன்றை கூட பெறவில்லை.ஆனால் எந்த மகேலவின் போர்ம்(out of form)இலங்கைக்கு பின்னடைவாக கூறப் பட்டதோ அதுவே இலங்கையினை இறுதிப் போட்டிவரை கூட்டி சென்றது என்றால் அது மிகை அல்ல.அதுவும் அந்த அரைஇறுதி போட்டி,அந்த இன்னிங்க்ஸ் ஒருபாடம்,பொறுமை,நிதானம்,வேகம் அனைத்தும் கலந்துகட்டி அடித்த ஒருவிருந்து.சபீனாபார்க் மைதானம் இனி அப்படி ஒரு இன்னிங்க்ஸ் காணுமா என்பது சந்தேகமே.

நான் ரணதுங்க தலைமை வகித்த போட்டிகள் அவளவாக பார்த்ததில்லை,பார்த்தாலும் அதை பகுத்தறியும் வயதுமில்லை.ஆனால் அர்ஜுனவின் பின்,அர்ஜுனவை விட ஆளுமை மிகுந்த தலைவராக மகேல விளங்கினார் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன்.தலைமையை கூட ரசிக்க வைத்த ஒரு தலைவராக மகேல விளங்கினார்.தலைமை மூலம் போட்டிகளை மாற்ற முடியும் என்று விளங்க வைத்தவர்.களத்தடுப்பு பிரயோகங்கள் வீரர்களுக்கு ஏற்றது போல அமைத்து பல யுக்திகளை கையாண்டார்.ஒரு தலைவராக மகேல அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். இவரது திறமைக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை போதாதுதான்.ஆனால் அவர் எடுத்த சொந்தமுடிவு என்பதால் அது சரியாகவே இருக்கும்.

சாதனைகள் பலவில் மகேல இடம்பெற்றாலும் மகேல உலகளவில் பெரிதளவில் அவதானிக்க படவில்லை.அதற்கு கரணம் மகேல அறிமுகமான போது ஜாம்பவான்களான அர்ஜுன ,அரவிந்த ,சனத் போன்றோர் இருந்தனர்.அவர்கள் ஓய்வு பெற்ற போது மகேல வீழ்ச்சி (உலக கிண்ணம் 2003 ) கண்டிருந்தார் .எனவே அந்தவேளை பிரகாசிக்க ஆரம்பித்த சங்கா அவதானிக்கப்பட்டு பின்னர் ஆங்கில வர்ணனையாளர்கள் மூலம் சங்கா விளம்பர படுத்தப்பட்டார்.இதனாலோ என்னமோ மஹேல இதுவரை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

வெளிநாட்டு மைதானங்களில் மகேல சோபிப்பதில்லை என்று ஒரு கருத்து உள்ளது இது முற்றிலும் தவறானது.உள்நாட்டில் சோபிக்கும் அளவு வெளிநாடுகளில் சோபிப்பதில்லை என்று கூறுதல் சரியாக இருக்கும், இதற்கு வெளிநாடுகளில் இலங்கை அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததும்,இளம் வயதில் வழங்கப்பட்ட உபதலைவர் பொறுப்பும்,சில வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மகேல சிறந்த போமில் இல்லாததுமே காரணங்மாகும்.ஆனால் தற்போது கடைசியாக பெற்ற 14 சத்தங்களில் 7 சத்தங்கள் வெளிநாடுகளில் பெறப்பட்டதாகும்,மகேல டெஸ்ட் சதத்தை பெறாத ஒரேநாடு தென்னாபிரிக்கா.அங்கும் 98 ஓட்டங்களில் துரதிர்ஷ்டதால் சதத்தை தவற விட்டிருந்தார்.மற்றும் மகேலவின் 11ஒருநாள் சதங்களில் 8 வெளிநாடுகளில் பெறப் பட்டவை.அனைத்து நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலாவிற்கு அனைத்து நாடுகளிலும் சதமடிக்க தென்னாபிரிக்காவில் ஒருசதம் மட்டுமே தேவையாக உள்ளது,அடுத்த தென்னாபிரிக்க தொடதுக்காக காத்திருப்போம்.இனிவரும் வெளிநாட்டுதொடர்களில் சாதிக்கபோகும் மகேலாவை நீங்கள் காணலாம்.

மகேலாவின் சாதனைகள்
1.வலது கை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் ,374 ஓட்டம்
2.ஒரு மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம், 2467 ஓட்டங்கள்,22 போட்டிகளில் s.s.c மைதானம்
3.ஒரு நாள் போட்டிகளில் அதிகமான பிடிகள்,165 பிடிகள்
4.ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகமான பிடிகள், டெஸ்ட் போட்டிகளில் , முரளியின் பந்துவீச்சுக்கு 75 பிடிகள்
5.டெஸ்ட் போட்டிகளில் எந்தவொரு விக்கட்டுக்குமான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்
6.டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்
7.டெஸ்ட் போட்டிகளில் நான்காம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 437 ஓட்டங்கள்,திலான் சமரவீராவுடன் இணைந்து கராச்சி மைதானத்தில் பாகிஸ்தானுடன்
8.டெஸ்ட் போட்டிகளில் ஆறாம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 351 ஓட்டங்கள் , பிரசன்ன ஜெயவர்த்தனவுடன் இணைந்து அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுடன்
9.ஒருநாள் போட்டிகளில் ஆறாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 218 ஓட்டங்கள், மகேந்திரசிங் டோனியுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆபிரிக்கஅணியுடன்
10. ஆசிய நாடுகள் நான்கிலும்(இலங்கை, இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்) 150+ ஓட்டங்களை பெற்ற முதல் மற்றும் ஒரேவீரர்.

இங்கிலாந்தில் வழங்கப்படும் விளையாட்டுக்கான அதி உயர் விருதான் விஸ்டன் விருது , மற்றும் I.C.C வழங்கிய சிறந்த அணித்தலைவருக்கான விருதும் மகேலாவின் திறமைக்கு ஏனைய சான்றுகள்.

தொடர்ந்து இதேமாதிரி தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கும் பட்சத்தில் 32 வயது மட்டுமேயான மகேலவால் டெஸ்ட் போட்டிகளின் மொத்த ஓட்டங்கள்,சதங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையுமே முறியடிக்கும் வாய்ப்புள்ளது. இலங்கை வருடத்திற்கு 10 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் இது சாத்தியமே. மகேல தொடர்ந்தும் மின்னுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

எது எப்படியோ மகேலவை அவதானிக்காமல் விடுவது கண்ணைக்கட்டி கொண்டு உலகம் இருட்டு என்பது போலதான்.மகெலவை விமர்சனம் செய்பவர்களுக்கும் அவரை உதாசீனப்படுத்திய வெளி ஊடகங்களுக்கும் தலைவர் ரஜினியின் பாடல் வரிகள்தான் நினைவில் வருகிறது "காத்திருப்பவர்கள் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு"
கிரிக்கெட்டின் அழிவுகாலம் ஆரம்பம்

இன்று இந்தியா அதிகமாகன ஓட்டங்களை குவித்தது,இலங்கை அதை துரத்தியது,இறுதியில் தோல்வியடைந்தது இவை அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட மொட்டையான ஆடுகளங்களில் போட்டிகளை நடாத்தி இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை காசு பார்க்கப்போகிறது? இன்று நேற்றல்ல இது பல வருடங்களாக நடக்கும் ஒரு கூத்துத்தான் என்றாலும் தற்போது இந்தமாதிரி ஆடுகளங்களை தயார் செய்வது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 280 - 320 வரையான ஓட்டங்களை பெறக்கூடிய ஆடுகளங்கள் இன்று 400 ஓட்டங்களுக்குமேல் இரு அணிகளும் பெருமளவிற்கு மாறியுள்ளமை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்றால் மிகையாகாது.

T/20 போட்டிகளென்றால் இந்தமாதிரி ஆடுகளங்கள் பரவாயில்லை அது பொழுதுபோக்கிற்கான பணம் சம்பாதிக்கும் ஆட்டம்,அதனை ரெஸ்லிங் போன்று ஒரு ஷோவாக பார்த்துவிட்டு மறந்துவிடலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளிலும் T/20 க்கு போடுவது போல ஆடுகளங்களை தயார்பண்ணுவது,எல்லைக்கோடுகளை சிறிதாக்குவது என்பன எதிர்கால சந்ததியினரின் கிரிக்கெட் பார்வையினை மாற்றிவிடும்.குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அபிப்பிராயத்தை குறைத்து அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிவிடும்.அதைவிட கொடுமை பந்துவீச்சாளர்களுக்கு கிரிக்கெட்டில் என்ன பங்கு என்பதே தெரியாமல் போய்விடும்.(பந்துவீச்சாளர்களின் கஷ்டத்தை பற்றி ஒரு பதிவு விரைவில் )

இவ்வாறான ஆடுகளங்கள் இன்று இந்தியா,பாகிஸ்தானில் அதிகமாக போடப்பட்டாலும் நியூசிலாந்து,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் அண்மைக்காலங்களாக இவ்வாறான ஆடுகளங்களை போடுவது துக்கமான விடயமே. அதற்காக ஒரேயடியாக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் போடப்படவேண்டும் என்பது அர்த்தமில்லை, பந்துவீச்சாளர்,துடுப்பாட்டவீரர் இருவருமே ஒரு போட்டியில் தங்களால் ஒரு ஆட்டத்தின் போக்கை மாற்றகூடிய ஆடுகளங்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தும். (அதிகமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆடுகளங்கள் எல்லாத்தரப்பினரும் தமது பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவை)
தொடர்ந்தும் இவ்வாறான மொக்கையான ஆடுகளங்கள் கிரிக்கெற்றை ஒரு ஷோவாக மாறினாலும் ஆச்சரியமில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சாபையினரே தயவு செய்து வருமானம் அதிகமாக வருகிறது என்று கிரிக்கெட்டை விபச்சாரமாக்காதீர்கள்.










