The Official Education Site of DHARUL HIKMA

Phone : (+94) 752523669
Email : kalvithottam@gmail.com

கூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க




எப்போதாவது உங்கள் நண்பருக்கு, உங்கள் வீட்டுக்கு எப்படி வந்து சேர்வது என்று காட்டியிருக்கிறீர்களா? அல்லது புகழ் பெற்ற ஸ்தலமாகிய உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து தகவல் தந்திருக்கிறீர்களா?



கம்ப்யூட்டரில் காலம் தள்ளும் நமக்கு இதற்கெல்லாம் கூகுள் மேப்ஸ் தான் சரியான சாதனம். ஆனாலும் இதில் நாம் நினைத்தபடி குறிப்புகளை எழுத முடியாது. இதற்கெனவே ஸ்கிரிப்பிள் மேப்ஸ் (scribblemaps) என்று ஒரு புரோகிராம் தயாரிக்கப்பட்டு கூகுள் மேப்புடன் வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் கூகுள் மேப்பில் ஓரிடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பும் வகையில் அம்புக்குறிகள் மற்றும் பிற வடிவங்களைப் போட்டு, குறிப்புகள் எழுதி தகவல்களை அமைக்கலாம். முழுமையான தகவல்களை அமைத்த பின்னர், அதனை அப்படியே பைலாக சேவ் செய்து, பின்னொரு நாளில் மற்றவருக்குப் பயன்படுத்தத் தரலாம். இதனைப் பயன்படுத்த www.scribblemaps.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன் இந்த சாதனம் பற்றிய குறிப்பு தோன்றி மறையும். பின் கூகுள் மேப் கிடைக்கும். அதன் மேலாக இந்த சாதனம் தரும் சில டூல்கள் கிடைக்கும். நீங்கள் எந்த மேப்பில் எந்த இடத்தில் குறிப்புகளை இணைக்க வேண்டுமோ, அந்த இடம் சென்று தேவைப்படும் இடத்தில், வேண்டிய அம்புக்குறிகள் மற்றும் வழிமுறைகளை அமைக்கலாம். கோடு வரையலாம், குறிப்பிட்ட ஷேப்களை ஒட்டலாம், பின் ஷேப் கொண்டு இடங்களைக் குறித்து வைக்கலாம், எண்களை அமைக்கலாம். குறிப்பு எழுதலாம். பின் இந்த குறிப்புகளுடன் அந்த மேப்பினை சேவ் செய்திடலாம். தவறான குறிப்பினை எழுதிவிட்டால் அல்லது கோடு போட்டுவிட்டால், அதனை இதில் தரப்பட்டுள்ள எரேசர் கொண்டு அழிக்கலாம். பின் இந்த மேப்பினை சேவ் செய்திடுகையில் அதற்கான அடையாள எண் தரப்படும். இந்த எண்ணைப் பின் நாளில் பயன்படுத்தி, மேப் குறிப்புகளை எடிட் செய்திடலாம். நம் வசதிக்கேற்ப குகூள் மேப்பினை வளைக்கும் இந்த வசதி மிகவும் விரும்பத்தக்கதும் பயனுள்ளதும் ஆகும்.
Share:

0 comments:

கருத்துரையிடுக


மன்னிக்கவும்.. இவ் வலைப்பக்கமானது திருத்த வேலை காரணமாக சோதனையோட்டத்தில் உள்ளது.

Recent Posts

ரூ. 251க்கு ஸ்மார்ட்போனா! இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, 251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Visiters